பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியேர்

எல்லோரும் ஆட்சேபியாமல் ஏற்றுக் கொண்டு வந்தார்கள். ஆனல் கலிலியோ அது தவறு என்று கண்டார். சகல வஸ்துக்களும் ஒ ோ உயரத்தி லிருந்து விழுந்தால் ஒரே சமயத்தில் ஒன்றாகவே வந்து சேரும் என்று உரைத்தார். அதை அரிஸ்டாட்டில் பக்கர்கள் ஏற்றுக்கொள்ள மறுத் தார்கள்.

ஆதலால் கலிலியோ அவர்களே அந்த நகரத் திலுள்ள சாய்வான கோபுரத்துக்கு அழைத்துச் சென்று அவர்களைத் தரையில் நிறுத்தி விட்டு தாம் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிப் போ னர். அங் கிருந்து இரண்டு இரும்புக் குண்டுகளே ஏக காலத்தில் கீழே விழச் செய்தார். ஒரு குண்டு 10 ராத்தல் நிறையுள்ளதாகவும் ஒரு குண்டு ஒரு ராத்தல் நிறை யுடையதாகவும் இருந்தன.

அரிஸ்டாட்டில் கூ றிய து உண்மையானல், ஒரு ராக் தல் குண்டு தரையைத் தொட 10 கிமிஷங் கள் செல்லுமானல் 10 ராத்தல் குண்டு 1 கிமிஷ நேரத்தில் வந்து சேரவேண்டும். ஆனல் இரண்டு குண்டுகளும் ஏக காலத்திலேயே கரையில் வந்து விழுந்தன.

அப்படி கலிலியோ குண்டுகளைக் கோபுரத்தின் உக்சியிலிருந்து விழச் செய்து விட்டு, கீழே இறங்கி வந்தார். அரிஸ்டாட்டில் அடியார்கள் பிரத்யட்ச மாகக் கண்டபின், தாங்கள் கூறியது தவறு என்று கண்டு கொள்வார்கள் என்று நம்பினர். ஆனல் அவர்களோ தங்கள் கண்களே நம்பவிரும்

25