பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

கலிலியோ அங்த நகரத்தை விட்டு ஒடி பிரான்ஸ் நகரத்தில் அடைக்கலம் புகும்படி நேரிட்டது.

அவருடைய குடும்பம் ஏற்கனவே பரம தரித் திர கிலேமையில் இருந்தது. அதோடு அவருடைய தங்தையார் இந்தச் சமயத்தில் தேக வியோகம் அடைந்து விட்டதால் அவர் அன்னிய நகரத்தில் அன்னையையும் தம்பியையும் இரண்டு தங்கைகளே யும் காப்பாற்ற அடைந்த கஷ்டம் கொஞ்ச கஞ்ச மில்லை. அவ்விதமாக இரண்டு வருஷங்கள் வறுமை யால் வாடி வதங்கிய பின் அவருடைய 27-வது வயதில் 1592-ம் வருஷத்தில் பாதுவா நகரத்தில் ஆசிரியர் பதவி பெற்றார். அந்தப் ப த வி யி ல், அவருக்குக் கி ைட த் த ஊதியம் அற்பமாகவே. இருந்த போதிலும் அவருக்கு அது ஆண்டவன் அருள் பிரசாதமாகவே இருக்கது.

அதோடு சில மாணவர்க்குப் பிரத்யேகமாக விட்டில்போய் பாடம் சொல்லிக்கொடுத்தும் பணம் சம்பாதித்துக் குடும் ப ச் செலவுகளை ஒருவாறு. கடத்திவந்தார். அப்படி அவரிடம் பாடம் கேட்ட வர்களில் அநேகர் பிற்காலத்தில் பேரும் புகழும். பெற்று விளங்கினர்கள் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

அவர் பாதுவா நகரத்தில் ஆசிரியராக இருந்த காலத்தில் அவருடைய ஆராய்ச்சி மகிமையையும் கல்வி போதிக்கும் திறமையையும் கேள்வியுற்று ஐரோப்பாக் கண்டத்திலுள்ள சகல தேசங்களி ல் ரு ந் தும் மாணவர்கள் திாள் திரளாக வந்து கொண்டிருந்தார்கள்.

37.