பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கார்ந்தாராம். இப்படி அவர் தமது ஆராய்ச்சி யிலே ஆழ்ந்து போய் உலக விவகாரங்களை மறந்து போனதற்கு அநேக திருஷ்டாங் தங்கள் கூறுவ துண்டு.

அத்தகைய மகாபுருஷர் 1642-ம் வருஷம் டிஸம்பர் மாதம் 25வட-அதாவது கிறிஸ்த்மஸ் என் லும் கிறிஸ்து ஜயங்தியாகிய புண்ணியதினத்தன்று உல்ஸ்தோர்ப் என்னும் ஊரில் பிறந்தார். அவர் பிறந்த சிறிது காலத்துக்குள் அவருடைய தந்தை தேகவியோகமாகி விட்டபடியால் அ வ ரு க் கு மூன்றுவயது நிறையும் சமயம் அவருடைய தாயார் விதாம் என்னும் ஊரிலிருந்த பாதிரியார் ஸ்மித் என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

ஆதலால் குழந்தை நியூட்டன் தாயாரைப் பெற்ற பாட்டியுடன் உல்ஸ்தோர்ப்பிலேயே வளர்ந்து வந்தான். பாட்டிமார் போன்மாரைச் செல்வமாக வளர்க்க ஆரம்பித்துச் சீரழித்து வருவது சகஜமல்லவா ? அதுபோல்தான் கியூட்ட னேயும் அவருடைய பாட்டி கெடுத்துவந்தாள்.

அதல்ை பன்னிரண்டாவது வயதில் அவரை இலக்கணப் பாடசாலைக்கு அனுப்பிய பொழுது அவர் படிப்பில் மட்டமாகவே இருந்தார். அதோடு எதிலும் தைர்யம் இல்லாமலும் யாரையும் அஞ்சிக் கொண்டும் இருந்தார்.

ஆயினும் ஒருநாள் அங்த மனுேபாவம் மாறும் படியான சக்தர்ப்பம் உண்டாயிற்று. சாதாரண மாகப் பாடசாலைகளில் எல்லாம் ஒவ்வொரு வகுப்பி 50