பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஆல்ை அவருடைய துர் அதிர்ஷ்டம் 1656-ம் வருஷத்தில் அவருடைய அன்னை மறுபடியும் விதவை ஆய் விட்டார். அதல்ை குடும்ப கிலங்க ளேக் கவனித்துக்கொள்ள அவருக்குத் தம்முடைய பதிறுை வயது குமாரனுடைய உதவி தேவையாய் விட்டது. ஆதலால் அந்த அம்மையார் கியூட்டனை இலக்கணப் பாடசாலை பிலிருந்து அழைத்து ஏர் உழும் தொழிலில் மாட்டிவைத்தார்.

ஆல்ை கல்வியில் ஆர்வமுடைய சிறுவன் கழனியில் வேலை செய்யவும் கன்று காலிகளைக் கணக்கிடவும் முடியுமோ ? அவன் பாடசாலையில் இரண்டு வருஷ காலத்தில் கற்ற கணிதம் அற்பமே யாயினும், அவனுடைய மனதைக் கவர்ந்து விடப் போதுமானதாய் இருந்தது. அவருக்கு அதைப் பரிபூரணமாகக் கற்கவேண்டும் என்ற ஆசை அனு தினமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

அம்மையார்க்கோ அது விஷயம் விளங்குவதா யில்லை. ஆயினும் கியூட்டனுடைய அதிர்ஷ்டம், அவ ருடைய தாய் மாமனர் வில்லியம் எஸ்கோ என்பவர் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலை அங்கத்தினரா யிருக்தபடியால்,அவர் பையனுக்குப் படிப்பிலுள்ள அடங்காத ஆசையைக் கண்டு அனுதாபம் கொண் டார். அதல்ை அவர் தம்முடைய கங்கையிடம் எடுத்துச் சொல்லி கியூட்டனே மறுபடியும் பாடசா லைக்கு அனுப்புமாறு செய்தார்.

அப்படியே நியூட்டன் 1660-ம் வருஷத்தில் பாடசாலையில் சேர்ந்து உழவுத் தொழிலில் 52