பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

குழாய்கள் மூலமாயும் ரத்தம் வெளியேறுவதாகக் கூறுவது சரிதான என்பதை ஆராய ஆரம்பித் தார்.

இரத்தக் குழாய்களில் இரத்தம் ஓடாதபடி செய்வதற்காகப் பலயிடங்களில் நூல்கொண்டு இறுகக் கட்டிவைத்தார். எந்தப்பக்கம் இரத்தம் கட்டி கிற்கிறது என்பதைக் கவனித்தார். அதைக் கொண்டு எங்கு நோக்கி இரத்தம் ஒடுகிறது என் பதை கிர்ணயம் செய்தார். கறுத்த ரத்தக்குழாயில் கட்டினல் இருதயத்தின் பக்கமாக உள்ள குழாயில் ாத்தமில்லாமல் காணப்பட்டது. சிவப்பு ரத்தக் குழாயில் கட்டினல் இருதயத்தின் பக்கமாக உள்ள குழாயில் ரத்தம் தேங்கிகிற்பது காணப்பட்டது. இதிலிருந்து தெரிவது என்ன ? ரத்தம் சிவப்புக் குழாய் மூலம் இருதயத்தை விட்டு வெளியேறுகிற தும் என்பதும் கறுப்புக் குழாய்மூலம் இருதயத் துக்கு வந்து சேர்கிறது என்பதும் புலகுைம். ஆத லால் ரத்தம் இருதயத்தின் இரண்டு அறைகளி லிருந்தும் வெளியேருமல் இடது அறையிலிருந்து வெளியேறி உடம்பில் சஞ்சாரம் செய்துவிட்டு. வலது அறைக்கு வந்து சேர்கிறது என்ற முடிவுக்கு வங்தார்.

அது சரி, ஆனல் வெளியேறும் ரத்தம் சிவப் பாயும் உள்ளேவரும் ரத்தம் கறுப்பாகவுமிருக் கிறதே. அதற்குக் காரணம் யாது? அத்துடன் கறுப்பு ரத்தம் மறுபடியும் சிவப்பு ரத்தம் ஆவது எப்படி ? இந்தக் கேள்விகளுக்கும் ஹார்வி பதில் கூறியிருக்கின்றாரர். 86