பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு




வானியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் விந்தைகள் பல புரிந்த விஞ்ஞான மேதைகளிலே ஆண்டவான் லோரான் இலவாஸ்யே என்பவரும் ஒருவராவார்!

ஆண்ட்வான் லோரான் லாவஸ்யே என்ற இந்த அறிவியல் அறிஞர், கி.பி. 1743 ஆம் ஆண்டில்பிரான்சு நாட்டிலே உள்ள பாரீஸ் நகரிலே பிறந்தவர்.

செல்வச் சீமான் வீட்டிலே பிறந்த செல்லக் குழந்தை அவர் ஏழ்மையை அவர் எப்போதுமே கண்டதில்லை, அதிலும், வணிகக் குடும்பம் என்றால் கூறவா வேண்டும்?

அவருக்கு நில புலங்கள் ஏராளம் இருந்தன! அத்துடன் குடும்ப அந்தஸ்தும் வேறு தாயில்லாப் பிள்ளை. இந்தச் சூழ்நிலையில் அந்த குழந்தை எப்படி வளர்ந்திருக்க வேண்டும்? எண்ணிப் பாருங்கள்.

இலவாஸ்யேயின் தந்தை, தனது மகன் சட்டப் படிப்புப் படித்துச் சிறந்த வழக்குரைஞராகத் திகழ வேண்டுமென்று விரும்பினாரே, அப்படித் தான் நடந்தாரா - அவர்?

இல்லையே ! அவ்வாறு நடந்திருப்பாரானால், அவர் நானிலம் புகழும் சட்டத் துறை மேதையாகச் சிறப்போடு வாழ்ந்து மறைந்திருப்பார்.

இலவாஸ்யே அப்படி நடக்காமல், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற நீதிக்கேற்ப, தனது தந்தை விருப்பத்தை நிறை வேற்ற மட்டுமே, சட்டத் துறை கல்வியை முடித்து வழக்குரைஞர் தொழில் நடத்திட அனுமதியும் பெற்றார்.