பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


வைத்தாரே தவிர, அவர் லட்சியக் கனவுப்படி ஒரு பூச்சிக் கூட சாகவில்லை. ஏன், உடல் கூட இளைக்காமல் கொழுத்தபடியே வளர்ந்தன.

அவர் ஆராய்ச்சி, அவரது எண்ணத்திற்கு எதிராக நாள் தோறும் நடந்து வருவதைக் கண்டு மனம் நொந்தார்.

ஒரு பூச்சிக் கூட நாளுக்கு நாள் இளைக்க வில்லையே என்றால், எங்கே இந்த ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒரே நொடியில் அழியப் போகின்றன? சிந்தித்தார் இப்படி!

அவற்றை அடியோடு அழித்திட எர்லிக் கடன் பெற்றுச் சாயம் போட்டால், அவை அந்த சாயத்தையே உண்டு கொழுத்து அந்தந்த பாத்திரங்களிலே சதுராடி உலா வருகின்றனவே! இந்த வேதனை அவருக்கு!

பூச்சிகள் ஒன்று கூட இளைக்க வில்லை! பாவம் டாக்டர் எர்லிக்தான் எலும்பும் தோலுமாய் இளைத்துக் கொண்டே வந்தார்.

அவர் உருவே மாறி விட்டார். உடலிலே உள்ள நரம்புகளை எல்லாம் எண்ணி விடலாம். தோலெல்லாம் சுருக்கம் கண்டு விட்டது.

இவ்வளவு வேதனைகளுக்கும் - வறுமையின் கொடுமைகளுக்கும் பிறகும்கூட, அவருக்கு ஆராய்ச்சி விரக்தியோ, வெறுப்போ-சலிப்போ- சஞ்சலமோ ஏதும் ஏற்பட வில்லை!

இவ்வாறு அவர், அறுநூற்றைம்பது ஆராய்ச்சி முறைகளைக் கண்டு பிடித்துச் செயலாற்றினார்!