பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


நொடியில் பாழாகி விட்டதே என்று எண்ணி வேதனைப் பட்டார்.

சூறாவளிக் காற்றும் மழையும் அவரது சோதனைகளுக்குப் பெரிய இடியோசைக் கேட்ட நாகம் போலாகும் நிலையை உருவாகிவிட்டது.

இருந்தும், அவர் சுவரிடிபாட்டில் சிக்கிய ஒவ்வொரு பூச்சிப்பெட்டியையும் எடுத்துப் பார்த்துப் பார்த்து வேதனைப்பட்டார். அவற்றை எடுத்து வெளியே வீசி, வீசி எறிந்தார்-வீங்கிய முகத்தோடும் - விம்மிய உள்ளத்தோடும்!

அழிந்துபோன கிருமிப் பெட்டிகள் போனது போக, மிஞ்சியது ஒரே ஒரு பெட்டி அதுகூட அவர் குளிக்கும் தொட்டியிலே விழுந்து கிடந்தது.

ஒடிப் போய் அதை எடுத்துப் பார்த்தார். எல்லா பூச்சிகளும் சாகாமல் நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.

எல்லாப் பெட்டிகளிலும் உள்ள பூச்சிகள் எல்லாம் நீரிலே போய் விட்டாலும், இந்த ஒரு பெட்டியாவது வைத்தது வைத்தபடியே இருக்கின்றதே என்று எண்ணி மகிழ்ந்தார்.

ஏழை ஒருவன் புதையலைக் கண்டெடுத்ததைப் போல, அவர் அதை எடுத்துப் பத்திரப்படுத்தினார்-காப்பாற்றினார். கவனமாகக் கண்காணித்து வந்தார்.

பெய்த மழையினால் நீர் நிலைகள் நிறைந்து வழிந்து ஓடியதனால், பெருகிய வெள்ளப் பெருக்கில் அவரால் மீண்டும் பூச்சிகளை விரும்பிய இடத்தில் விரும்பியபடி, விரும்பியவற்றைச் சேகரிக்க முடியவில்லை-சிலகாலம் - இந்த நிலை.