பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


6. மரண தண்டனைப் பெற்ற விஞ்ஞானி!

றியாமையை அகற்றி அறிவியலில் அற்புதங்கள் பல ஆற்றியவர் ஆண்ட்ரியஸ் வெசேலியஸ்! அவனிக்கு மருத்துவத் துறையில் புத்தொளி புகட்டிய அறிவு மன்னன்:

இருபத்து எட்டே வயது நிரம்பிய அந்த இளம் மேதை, ஒர் நாள் ஸ்பெயின் நாட்டு அரசனான ஐந்தாம் சார்லஸ் என்பவரிடம், தனது உயிருக்காகத் தஞ்சமடைந்தார்.

அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியவர்கள் யார்? வேறு யாருமல்ல, அவருடன் ஆராய்ச்சியிலே ஈடுபட்ட சிலர் - மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களே ஆவர்:

அவர்களுக்குள் ஏற்பட்ட அறிவழுக்காற்றால், வெசேலியசைக் கடுமையாக எதிர்த்து, மக்களைத் தூண்டி விட்டு விட்டார்கள்.

அதன் எதிரொலியால்தான், அவர் ஸ்பெயின் வேந்தரிடம் தனது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றுக் கேட்டுக் கண்ணிர் விட்டவாறே அடைக்கலம் அடைந்தார்.

“நான் சிறு வயதினன்.அந்த ஒரே ஒரு அடிப்படைக் காரணத்தை வைத்துக்கொண்டே, நான் மருத்துவத் துறையிலே செய்யும் ஆராய்ச்சிகளை எல்லாம் அலட்சியப் படுத்துகிறார்கள்"