பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

119



அதனாலே அவர் சிறு வயதிலேயே மருத்துவ ஆராய்ச்சியில் அவரையும் அறியாமல் ஈடுபடும் வேட்கை பிறந்தது.

எலி, நாய், பெருச்சாளிகள் போன்ற பல விலங்குகளை அறுத்துப் பரிசோதனையில் ஈடுபட்டார். அந்த சோதனையிலேஅவருக்கு மிகவும் பயன் ஏற்பட்டது.

லூவேன் பல்கலைக் கழகத்திலும், பாரீஸ் பல்கலைக் கழகத்திலும், இறுதியாகப் பாடுவாநகரின் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்து மருத்துவக் கல்விக்கேற்றப் படிப்பைப் படித்து முடித்தார்.

அவரது அறுவை சிகிச்சை முறைகள், கல்விக் கற்ற காலத்திலேயே நல்ல புகழை அவருக்குத் தேடித் தந்தது.

அதனால், பாடுவா பல்கலைக் கழகமே அவரைத் தனது மருத்துவத் துறையின் இரண வைத்தியப் பேராசிரியராகப் பணியாற்றச் செய்தது.

அவர் அந்தப் பேராசிரியர் பதவியிலிருக்கும் போதே தனது அறுவை சோதனைகளை அப்பழுக்கில்லாமல் நடத்தினார்.

அவற்றின் பயன்களை எல்லாம் தொகுத்து எட்டுப் பாகங்களைக் கொண்ட மாபெரும் ஆராய்ச்சி நூற்களாக எழுதி முடித்தார்.

அந்த நேரத்திலேதான், ஆண்ட்ரியஸ் வெசேலியஸ் செய்த ஆராய்ச்சிக் கருத்துக்கள், பண்டைய மருத்துவ மேதை கேலன் செய்த ஆராய்ச்சிக்கு சவாலாக அமைந்திருப்பதை, மற்ற மருத்துவத் துறை நிபுணர்கள் கண்டார்கள்!