பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


மனிதகுலம் வாழ மாபெரும் சாதனையை தனது ஆழமான ஆராய்ச்சிகள் வாயிலாக கண்டுபிடித்து உண்மைகளை மட்டுமே கூறிய உத்தமனுக்கு மனித குலம் தந்த பரிசு என்ன தெரியுமா?

மரண தண்டனை மரண தண்டனை!! மரண தண்டனை!! ஆம்! மரண தண்டனையைத்தான் இந்த மனித சமுதாயம் வழங்கியது!

உலகம் தோன்றிய நாள் முதல் அன்றுவரையில் மனித உடலியற் கூறுகளுக்குரிய சில புதிய கண்டுபிடிப்புகளை பிண அறுவை சிகிச்சை மூலம் உய்த்துணர்ந்து உயர்த்திய மனித தெய்வத்திற்கு கிடைத்தது மரணதண்டனை!

பண்டைய கிரேக்க, ரோம மருத்துவத் துறையை எதிர்த்து, வன்மைமிக்கச் சான்றுகளைக் காட்டி, அவற்றிலே உள்ள குற்றங் குறைகளைக் கலைத்து புதிய கண்டுபிடிப்புகளைக் கூறிய மருத்துவத்துறை புரவலனுக்கு மனிதகுலம் வழங்கிய பரிசு மரண தண்டனை.

வெசேலியசுக்கு மரணதண்டனை என்றதைக் கேட்டதும் சார்லஸ் மன்னன் மனம் கலங்கினான். மதகுருமார்கள் விதித்த தீர்ப்பு அல்லவா அது?

எப்படி எதிர்ப்பான்?

மனிதாபிமானத்துடன் எதிர்த்தால் விரோதம். அவனுக்கு எதிராக மதம் போர்க்கொடி தூக்கி விடுமோ என்ற பயம். அதனால் ஒரு வேண்டுகோளை மட்டுமே விடுத்தார் மதகுருமார்களுக்கு...

என்ன வேண்டுகோள் அது?