பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

139


அந்தப் பணத்தைப் பெற்ற அவளது அக்காள் மருத்துவக் கல்வியை முடித்துப் பட்டமும் பெற்றாள். தன்னுடன் படித்த ஒருவனையே காதலித்து மணந்தாள்!

மேடம் கியூரி, செர்பான் நகரிலே உள்ள விஞ்ஞானப் பல்கலைக் கழகத்திலே சேர்ந்து படித்தாள். வேலை செய்து கொண்டே படித்தும் வரலானாள்:

அந்த நேரத்தில், பசி-பட்டினி பற்றாக்குறை பொருளாதாரம் ஆகியவை அவளைப் பயங்கர உருவமெடுத்துப் பழி வாங்கின.

இத்துணை இடுக்கண்களுக்கு இடையேயும் அவள் கணிதம், கவிதை, இரசாயனம், இசை, விஞ்ஞானம், நடனம், வானநூல் ஆகியவற்றிலே எல்லாம் அதனதன் தகுதி தரத்தோடு தலை சிறந்த புலமையாளியாக புகழ் பெற்றாள்.

துன்பமே தந்து வரும் பொருளாதாரத் துயரைத் துடைத்துக் கொள்ள, இரசாயனச் சோதனைச் சாலை ஒன்றிலே காலி புட்டிகளைக் கழுவும் வேலையை ஏற்றாள்.

இந்தப் பணியைப் புரிந்துகொண்டே எம்.ஏ, பட்டம் பெற்றாள். ஆனால், அன்றுவரை அவள் ஆடவர் முகத்தையே ஏறெடுத்துப் பார்க்கவும் வெட்கப் பட்டவள்.

உலகப் பகழ் பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியான பியெர் என்பவர், மாபெரும் பெருமை பொருந்திய பெண்களைக் காண்பது அரிது. விஞ்ஞானத்தில் ஆழ்ந்த கருத்துடைய விஞ்ஞானிக்கு - சாமான்ய-