பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


மானமான பெண், உறுதுணையாகத் தடையாகவே இருப்பாள், என்ற கருத்துடையவராக இருந்தார்.

பிரெஞ்சு முழுவதும் நற்பெயர் பெற்றுப் புகழேணியின் சிகரத்தில் உலா வந்து கொண்டிருந்த பியரும், மேரி கியூரியும் விஞ்ஞானப் பேராசிரியர் கோவால்ஸ்கி என்பவரின் இல்லத்திலே முதன் முறையாகச் சந்தித்தனர். மூவரும் விஞ்ஞான விளக்கங்களைப் பற்றி பேசி மகிழ்ந்தனர்.

விஞ்ஞானத் துறையில் சிறந்த சோதனைகள் மேல் சோதனைகளை நடத்தி 'பையீசோ - எலெக்ட்ரி சிட்டி’ என்ற பெயர் பெற்ற அழுத்த மின்சாரத் தத்துவத்தைக் கண்டு பிடித்தவர் பியர். அதனால், அவரது புகழ் நாடு முழுவதும் பரவி இருந்தது.

பியர், விஞ்ஞான மேதையாக விளங்குவதாலும், தானும் அறிவியல் துறையிலே தளராது உழைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாலும், பியருக்கு உதவியாக - உறுதுணையாக விளங்கி, ஏதாவது நாட்டுக்குரிய நலனைத் தேடலாம் என்ற முடிவுக்கு மேரி வந்தார்.

இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டனர். மனம் விட்டுப் பழகியதால் அவர்கள் மணந்தனர்.

கியூரி தம்பதிகள், குடும்ப வாழ்க்கையிலே குதூகலமாக வாழ்ந்தனர். இரு பெண் குழந்தைகளைப் பெற்றனர். இருப்பினும் அறிவியல் துறைக்குத் தங்களை அர்ப்பணித்தபடியே அயரா தொண்டாற்றினர்.