பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

141


அந்த நேரத்தில் புதிய புதிய அறிவியல் அற்புதங்கள் ஆண்டுக்கு ஆண்டு, நாட்டுக்கு நாடு வெளி வரத் தொடங்கின.

செர்மன் நாட்டிலே வில்ஹெல்ம்ரெண்ட்கென் என்பவர் ‘எக்ஸ்ரே’ என்ற கதிர்களைக் கண்டுபிடித்து, அது திண்ணிய பொருளையும் ஊடுருவச் செய்யும் என்ற அற்புதத்தைச் செய்து காட்டினார்.

பிரான்ஸ் நாட்டு விஞ்ஞான வித்தகர்களிலே ஒருவராக விளங்கிய பேராசிரியர் ஹென்றி பெக்கெரல் என்பவர், ‘ஃபாஸ்ஃபரஸ் சென்ஸ்’ என்ற ‘ஒளிர்தல்’ தத்துவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார். வெயில் சூடேறும்படி விடப்பட்டிருந்த பொருள்களில் சில, பின்னர் இருட்டில் பளபள என்று ஒளி வீசுவதைப் பற்றிய ஆராய்ச்சியே அந்த ஒளிர்தல் என்ற தத்துவம்.

அவருடைய அறிவியல் ஆய்வில், யூரேனியம் அடங்கிய பொருளாகிய ‘பிட்சு-பிலெண்ட்’ என்பதில் யுரேனியத்தைத் தவிர, வேறு ஏதோ ஒரு தனிமம் இருக்கிறது என்பதைக் கண்டார்.

கியூரி தம்பதிகளுக்கு வசதி மிக்கதோர் ஆராய்ச்சி நிலையம் இல்லை. அதற்குத் தக்க வசதிகளும், துணைக்குப் பணிபுரியும் வேலையாட்களும் வைத்துக் கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு.

இந்த அவல நிலையில் அவர்கள் ஒரு குதிரை லாயத்தையே விஞ்ஞான ஆராய்ச்சிச் சாலையாகப் பயன் படுத்தலாயினர்.

இரவு பகல் பாராது, தங்களது இன்ப