பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

145


அதன் அடையாளமாய், ஈரான், ஈவ் என்ற இரண்டு மக்களை அவர்கள் வாழ்க்கைக்குச் சான்றாக ஈன்றாாகள்.

பாரீஸ் நகரில், கி.பி.1906-ஆம் ஆண்டு விஞ்ஞானிகளது விழாவிற்குச் சென்றனர். அது மாபெரும் கூட்டமாய் விளங்கியது.

கொண்டாட்டங்களும் உண்டாட்டங்களும் தடபுடலாக அந்தக் கூட்டத்தில் நடந்தன.

அந்த விழாவிலே கலந்து கொண்டு மகிழ்ச்சிப் பொங்கத் திரும்பி வந்து கொண்டிருந்த பியர், வீதியிலே வேகவேகமாய் ஓடி வந்துக் கொண்டிருந்த ஒரு குதிரை வண்டியால் மோதப்பட்டு கீழே விழுந்து மாண்டார்.

புகழ்மிக்க ஒரு விஞ்ஞானியை புவனம் இழந்து புலம்பியது.

மேரி கியூரி கணவனை இழந்தாள் - கலங்கினாள். கண்ணிர் விட்டவாறே அலங்கோலமாய்க் காட்சி தந்தாள்.

கலகலவென்று பேசித் தனது குழந்தைகளைக் களிக்க வைத்த கியூரி, ஊமையானாள்.

கைம்பெண்ணாகிவிட்ட அந்த வெண்மேகம், கருமேகம் போல நாள்தோறும் கண்ணிர் துளியினைக் கசிந்தபடியே காலந்தள்ளி வந்தது.

பியரின் அகால மரணத்தால் காலியான விஞ்ஞானப் பேராசிரியர் பதவியை, பிரான்ஸ் நாடு மேரி கியூரிக்கே தந்து பாராட்டியது.