பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு




விஞ்ஞான மேதைகளே ஒருவருக்கொருவர் இதற்கான வாதப் பிரதிவாதங்களை எழுப்பியும் மறுத்துக் கொண்டும், ஆதரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

இலவாஸ்யேயின் முடிவு, நம்ப முடியாத ஒரு இந்திர ஜால வித்தை, கண்கட்டுத் தந்திரம் என்றெல் லாம் கூறி, எல்லா அறிவியல் ஆய்வாளர்களும் அவரவர் சோதனைகளுக்கேற்ப அவர் மீது கண்டனக் குரலை எழுப்பினார்கள்.

காவெண்டிஷ் கண்டு பிடித்த பரிசோதனையின் மடிவைத் தொடர்ந்த செய்ய இவர் யார்?

அவராலேயே முடிவு கூற முடியாமல் விடப்பட்டதற்கு இவர் முடிவு கூறுவதா என்ற அகம்பாவக் கணைகளே லவாஸ்யேவை நோக்கிப் பாய்ந்தன :

இந்த எதிர்ப்புகளைக் கண்டு லவாஸ்யே அஞ்ச வில்லை ! சிந்தனையின் முடிவுக்கு அறிவுலகம் வழங்கிடும் பரிசு இவைதானா என்று சிரித்தார்!

அவற்றையெல்லாம் தனது ஆராய்ச்சிக்கு உரமாகப் போட்டுக் கொண்டு, மன உரத்தோடு மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்தார்.

எரி இயல் காற்றுக்கு முதன்முதல் ஐட்ரஜன் என்ற பெயரைச் சூட்டியவரே இலவாஸ்யேதான்்

ஐட்ரோ என்றால் நீர் என்று பொருள், ஜென்னன்

என்றால் இயற்றுதல் என்பதாகும், இந்த இரண்டு சொற்களும் கிரேக்க மொழியைச் சேர்ந்தவை