பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

29


 மாரி, இருகை எடுத்து அவர்களைக் கும்பிட்டு "அழிக்காதீர்கள்”, என்று கெஞ்சியபடியே அழுதாள்! அப்போதும், அந்த நாசக்காரர்கள் அவள் மீது இரக்கம் காட்டவில்லை.

எனது விஞ்ஞான நூல், பிரெஞ்சு விஞ்ஞானக் கலைக் கழகத்தினால் ஏற்கத் தக்கது அல்ல என்று எவன் கூறினானோ, அவன் வீட்டிலும், சோதனைச்சாலை யிலும் எவ்வித ஆய்வுக் கருவிகளும், குறிப்புகளும், இருக்கக்கூடாது, என்று கூறி மாரா நூலைத் திருப்பியனுப்பியதை எதிரொலிப்பதுபோல இலவாஸ்யே வீடு காட்சி தந்தது.

பரம்பரை, பரம்பரையாகச் செல்வச் செழிப்பிலே வந்த வணிகன் வீட்டுச் செல்வனை, ஏதோ திருடனைப் பரபர வென்று அழைத்துப் போவதைப் போல, பிரரெஞ்சு நாட்டு அரசு அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றது.

கொடுமையாக அவரை அழைத்துச் செல்வதை, ஏன் இப்படி இழுத்துச் செல்கிறார்கள்? என்று கேட்க, ஒரு பிரெஞ்சுக் குடிமகனுக்கும் அப்போது சுதந்திரமில்லை,

பிரெஞ்சுப் புரட்சி, அப்போதுதான் ஒய்ந்திருந்தது. அதை அடுத்து உருவான அரசோ - புரட்சியை விடக் கொடுமையும் - அராஜகமும் கொண்ட கொடுங்கோல் அரசாக இருந்தது. அதனால், யாரும் வாய் திறந்து ஏதும் பேசப் பயப்பட்ட காலமாக அது இருந்தது.

கொடுஞ் செயல்கள், அச்சுறுத்தல்கள், பழிவாங்கும் பண்புகள், அரக்கச் செயல்கள் மூலம் பிரான்ஸ்