பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞37



2. வாளுக்குப் பலியான விஞ்ஞானி


உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்று நோக்கி, அவ்வாறு காணப்பட்டன என்ன என்பதை விளக்கமாக, அறிந்து, அறியப்பட்ட செய்திகளின் வாயிலாகப் புதிய கருத்துக்களைக் கண்டுபிடிக்கக் கூடிய திறமையுடையவனே - விஞ்ஞானி ஆவான்.

அற்புத அறிவுடைய அத்தகைய அரிய இதயத்தைக் கள்ளம் கபடு முதலிய கசடுகளால் பழுதுபடுத்தி விடாமல், மனித சமுதாயம் எச்சரிக்கையுடனும் வியப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

தப்பித் தவறி அந்த மக்கட் சமுதாயம், அவை போன்ற பழிகளை ஒரு விஞ்ஞானியின் மீது படர விடுமானால், அது சமுதாயக் குற்றம் மட்டுமல்ல, உலகத்துக்கே மாபெரும் நட்டமும், துரோகமுமாக அமைந்து விடும் என்பது உறுதி.

ஒரு மனிதனுடைய உயர்வும். தாழ்வும், அவனுடைய உள்ளத்தைப் பொறுத்ததேயாகும். எப்படி எண்ணு கிறானோ விஞ்ஞானி அப்படியே அவன் செயல்படுகிறான்.

தனி மனிதன் ஒருவன் தனது சிந்தனைகளை உயர்ந்த கொள்கைகளில் செலுத்தினானால், அவனை நம்பி நடமாடும் சமுதாயம், நாடு, உலகம், ஆகியவை யாவும் உயர்ந்த கொள்கைகளில் வாழ வழி கேட்டுத் தோள் தட்டி நிற்கும் என்பது பொருள்.

அத்தகைய சமுதாயத்தையும் உலகையும், காண அறிவியல் அறிஞர்களிலே பலர் அல்லும் பகலும்