பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞⃞ 41


டீஸ் மனம் தளரவில்லை. எதிர்ப்புப் பெருகப் பெருக அவருக்கு ஆராய்ச்சி ஆர்வமே மேலோங்கி வளரலாயிற்று.

இதற்குப் பிறகே அவர் கிணற்றிலிருக்கும் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றுவது என்று ஆராய்ச்சி செய்தார்.

அந்த பரிசோதனையிலே ஏற்பட்ட பலனைைத்தான் இன்று நாம் 'ஆர்க்கிமிடீஸ் திருகு' என்று அழைத்து வருகிறோம்.

சிலிண்டர் வடிவமான பாத்திரத்தின் உள்ளே இசைவாகப் பொருத்திய சுருள் வடிவுத் திருகை அங்குள்ள மக்களுக்குக் காட்டி, இதன் மூலம் கிணற்று நீரை உள்ளேயிருந்து கொண்டு வர முடியும் என்றார்.

உடனே, அவ்வூர் மக்கள் அவரை வாழ்த்த வில்லை. கண்கட்டு வித்தையைக் காட்டுகிறான் என்று கைகொட்டிச் சிரித்தனர்.

சிரித்த அந்த மக்களைச் சிந்திக்க வைக்க அரும்பாடு பட்டார் ஆர்க்கிமிடிஸ். சித்ரவதைப்படும் மனதைத் தான் அவரால் பெற முடிந்ததே தவிர, அவரது எந்த முயற்சியும் அப்போதுள்ள மக்களிடையே எடுபடவில்லை.

ஆனால், இன்று நாம் அந்த தத்துவத்தைக் கப்பல்களிலே உள்ள தானிய மூட்டைகளை மேலேற்றவும் கீழிறக்கவும் பயன்படுத்தி மகிழ்கின்றோம்.

உலை அடுப்புக்கு நிலக்கரியை ஊட்டும் தானியாகுக்கு கரியூட்டிகளிலும், உலை அடுப்பிலிருந்து