பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

63


அதனால், அந்த கணித முறை விதிகளுக்குப் பித்தாகரஸ் தேற்றம் என்று, இன்றும் உலகில் பெயர் வழங்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்- படிக்கின்றோம்!

நுண் தொழில் துறைக் கட்டுமாணங்கள் எல்லாவற்றிற்கும், பித்தாகரஸ் தேற்றமே அடிப்படையாக அமைந்துள்ளது.

ஒரு செங்கோண முக்கோணத்தின் சிறிய பாகங்கள் இரண்டின் மீதும் வரைந்த சதுர பரப்புகளின் மொத்த அளவு, அதன் செவ்வகத்தின் மீது வரைந்த சதுரத்தின் பரப்புக்குச் சமம், என்ற விதியை உருவாக்கியதே பித்தாகரஸ் தேற்றம்தான்.

செங்கோண முக்கோணத்தின் ஒருகோணம், 90 டிகிரியாக, அதாவது செங்கோணமாக இருக்கும், என்பதை, பித்தாகரஸ் கணிதத்தின் வாயிலாகச் செய்து காட்டி மெய்ப்பித்தார்.

ஒரு பக்கம் மூன்று அலகு நீளமும், மற்றொரு பக்கம் நான்கு அலகு நீளம் உள்ள செங்கோண முக்கோணமே அளவு காணும் வரலாற்றுத்துறையில் முக்கியமானதாக இருக்கிறது.

அதுபோன்ற முக்கோணத்தின் செம்பக்கம், அதாவது செங்கோணத்துக்கு எதிர்பக்கத்தின் நீளம் ஐந்து அலகாக இருக்கும்.

அதன் பக்கங்களின் மீது வரையப்பட்ட சதுரங்களில் ஒன்றில், ஒன்பது சிறிய சதுரங்களும், மற்றொன்றில் பதினாறு சிறிய சதுரங்களும் இருக்கின்றன.