பக்கம்:விடிவெள்ளி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 விடிவெள்ளி தற்காப்பும் வலுவற்றுப் போயின. அவர்கள் அடித்த அடியால் நிலைகுலைந்து தள்ளாடிக் கீழே சாய்ந்தான் அவன் . - அவன் இறந்துவிட்டான் என்றே கருதினர் குடி வெறியர்கள். அந்நேரத்தில் மாளிகைப் பக்கமிருந்து வர குணத்தேவரின் குதிரை வண்டி வருவது அவர்கள் பார்வை ‘இவன் தேவரின் ஆளாக இருந்தாலும் இருக்குமோ? என்ற ஐயம் அவர்களுக்கு எழுந்தது. அப்படியிருந்தால் தேவரின் பார்வையில் படாமல் தப்புவதே நல்லது என்று தீர்மானித்து அவனை அப்படியே நடுத்தெருவில் விட்டு விட்டு வீரர்கள் ஓடி மறைத்தார்கள். அவசரகற்ற கதியிலே வந்தது வரகுணத்தேவரின் வண்டி, இனம்வழுதி விழுந்து கிடத்தஇடத்தை தோக்கியே வந்து கொண்டிருந்தது அது! - 11. மற்றுமொரு அன்னை கிளப்பிரர்களால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்த இளம்வழுதியை நோக்கி வந்த வண்டியில் வரகுணத்தேவர் தான் இருக்கிறார் என்று குடிகாரர்கள் நம்பினார்கள். அதனாலேயே, அடிபட்டு விழுந்தவனை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் அவர்கள். மிடுக்கு நிறைந்த குதிரைகள் ஒயிலாக இழுத்து வந்த அந்த அலங்கார வண்டி மெதுவாக முன்னேறியது. பாதை நடுவில் ஒருவன் கிடப்பதைக் கவனித்த வண்டிக்காரன் ஐய்யய்யோ!' என்று பதறி, வண்டியை நிறுத்தினான். உள்ளேயிருந்து என்ன?’ என்ற கேள்வி விறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/101&oldid=905842" இலிருந்து மீள்விக்கப்பட்டது