பக்கம்:விடிவெள்ளி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விடிவெள்ளி அப்படியானால் அவரை மெதுவாகத் தூக்கி வா வண்டிக்குள்னே படுக்கவை' என்று உத்திரவிட்டாள் திலகவதி. வண்டிக்காரன் வியப்புற்றான், நிமிர்ந்து நின்று அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். நம்ம வண் டியிலா அம்மா?’ என்றான். ஆமாம். பின்னே வேறே வண்டி எங்கே இருக் கிறது?" என்று தேவரின் திருமகள் கேட்டாள். 'இது யாரோ..." அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மைப் போன்ற ஒரு உயிர். ஆபத்தில் சிக்கி உணர் வற்றுக் கிடக்கி வர்களுக்கு உதவி புரிய வேண்டியது தமது கடமை. வீனா யோசித்துக் கொண்டு நில்லாதே, அவரை எடுத்து வா' . திலகவதியின் மென்மையான பேச்சு திடமான கட்டனையாகவே தொனித்தது. அதற்குக் கீழ்ப்படிய வேண்டியது தானே அவன் கடமை? வண்டிக்காரன் மறுபேச்சுப் பேசாமல், இளம்வழுதி யைச் சுமந்து வந்து, வண்டியினுள் கிடத்தினான். தனது இடத்தில் அமர்ந்து மீண்டும் வண்டியைச் செலுத்த : ; శఢ திலகம் வண்டிக் கதவைச் சாத்தி அடைத்துக் கொண் டான். வசதியான மூடு வண்டி அது. உள்ளே இருப் பவர்கனை வெளியேயிருந்து எவரும் கண்டுகொள்ள முடியாது - ஐயாவுக்குத் தெரிந்தால் மிகவும் கோபிப்பார்கள்' என்று வண்டிக்காரின் முணுமுணுத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/103&oldid=905845" இலிருந்து மீள்விக்கப்பட்டது