பக்கம்:விடிவெள்ளி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ) விடிவெள்ளி மரத்தின் வழியே கீழிறங்கி, குறுகலான வழியில் நடத்து மறுபடியும் ஆற்றங்கரைக்கு வந்து சேர்த்தான் இளம்வழுதி. "சமயம் தேய்ந்துவிட்டது; அதை முன்னைப் புகழ் நிலைக்கு உயர்த்துவதற்காகக் களப்பிரர்கள் வீழ்ச்சி அடைய வேண்டும் என்று அடியார்கள் விரும்புகிறார்கள். சிவன் தந்த தமிழ்மொழி வளம் குன்றிவிட்டது; அதைப் போற்றி வளர்ப்பதற்காகக் களப்பிரர்களை ஒழிக்க வேண் டும் என்று தமிழன்பர்கள் ஆசைப்படுகிறார்கள். இவ்விரு சாராரும் துணிந்து செயலாற்றக்கூடிய வலிமை பெற் றிருக்கவில்லை. நமது பழம்பெரும் குடியினர் ஆட்சிபுரிந்த நாடு அந்தியரிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைத் தாய்க் குலம் விரும்பவில்லை. விடுதலை பெறுவதற்கு அவர்கள் தங்களால் இயன்ற அளவு துணைபுரிவார்கள் என்றும் தெரிகிறது. ஆகவே, வெற்றி பெறுவதற்கு வீரத்தன் அணிவகுப்புதான் தேவை அருளும் அறிவும், அன்பும் வீரத்தின் பக்கபலம் இல்லாது போனால் மிகச்சிறந்த சாதனை எதையும் செயதுவிட முடியாது என்றே நான் உணர்கிறேன்...' தனது அனுபவங்கள் அறிவுறுத்திய உண்மையைப் பற்றிச் சித்தித்தட்டி நடந்தான் அவன், இனி என்ன செய்வது? இதுதான் இளவழுதியின் முன்தின்ற பிரச்னை. ரர்களைத் திரட்ட வேண்டும்! அதற்கு எவ்வாறு செய லாற்றுவது?...மங்கையர்க்கரசி எவர் துணையோ நாடும் படி செல்லவில்லையா?-இந்த நினைப்பு வரவும், சாத்தன் கணபதி என்ன செய்கிறானோ? என்ற துடிப்பு பிறந்தது, 'இளம்வழுதி, மாலையிலேயே நேராகப் பூங்குடி ஆச்சி வீட்டுக்குப்போய், சாத்தன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்பட்டான். வேகமாக நடந்தான். - " -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/119&oldid=905878" இலிருந்து மீள்விக்கப்பட்டது