பக்கம்:விடிவெள்ளி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 135 சொல்கிறபடி நடந்துதானே 87 ഖേങ്@്? என்றும் அவன் நினைத்தான், குளிப்பதற்கு வேண்டிய வசதிகள் அவனுக்குச் செய்து தரப்பட்டன. அறுசுவை உண்டியும் கிடை ததது. மீண்டும் அவனது ஆசைகள், கனவுகள் பற்றி அல்லாம் பேசுவதற்கும் வாய்ப்பு கிட்டியது. அவன் கூறியதைக் கேட்டிருந்த காரி தமது கருத்து எதையும் வெளிப்படை யாகத் தெரிவிக்கவேயில்லை, - இளம்வழுதி அமைதியாக உறங்குவதற்கு ஏற்ற தனி யிடத்தைக் காட்டும்படி ஒரு ஆளை ஏவினார் அவர், விசாலமான தோட்டத்தின் ஒரு மூலையில் ஒதுங்கி நின்ற தனிக் கட்டடத்தில் வசதிகள் நிறைந்த ஓர் அறையைச் சேர்ந்தான் வழுதி, தூக்கம் அவனுக்குத் தேவையாகத் தானிருந்தது. 'உண்ட கிற்க்கமும்' துண்டியது. ஆகவே, படுக்கையில் சாய்ந்ததும் அவன் சுகமான துயி வில் ஆழ்ந்தான். இளம்ங்குதி கண் விழித்தபோது, தான் வெகு தேரம் துங்கியிருக்க வேண்டும் என் உணர்வு அவனுக்கு ஏற் பட்டது. அன்று பொழுது வீணாகிவிட்டது போன்ற வருத்தம் அவன் உள்ளத்தை அழுத்தியது. மாறன் காரியை மீண்டும் கண்டு பேசி, அவரிடமிருந்து தெளி வான பதிலை உடனடியாகப் பெற்றாக வேண்டும்; அவ ரால் எவ்வித உதவியும் கிட்டாது என்று விளங்கிவிடுமன னால் மேலும் வீண் பொழுது போக்காமல் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டியதுதான்; இரவாகிவிடுமே என்று கவலைப் பட்டுப் பயனில்லை என்று முடிவு செய்தான். ஆனால் எதிர்பாராத அதிர்ச்சி அவனுக்காகக் காத் திருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/136&oldid=905914" இலிருந்து மீள்விக்கப்பட்டது