பக்கம்:விடிவெள்ளி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 0 விடிவெள்ளி அவள் பேச்சை மறுப்பதற்கில்லை என்று உணர்ந்த இளம்வழுதி தன்றியோடு, அமுதம், நீ செய்யும் உதவி மிக மிகப் பெரியது. இதை நரன் மறக்க முடியாது. என் னால் உனக்குத் தீங்கு எதுவும் விளைந்துவிடக் கூடாதே என்று தான் அஞ்சுகிறேன்' என் தான் அதைப்பற்றி கவலையே வேண்டாம், சென்று வாருங்கள்' என்று விடை கொடுத்தால் அவள். "நிச்சயமாக வருவேன், அமுதம், வெற்றியோடு மீண்டு வந்து உன்னைக் காண்டேன். திருவருள் நமக்குத் துணை நிற்கும் என்ற உறுதி என் உள் ளத்தில் நன்கு நிலைத்து விட்டது' என்று கூறிய வழுதி, அவளைப் பிரித்து செல் மனமில்லாதவனாய் நடந்தான். அவன் வெளியேறியதும் ஆமுதவல்லி அறைக்கதவை இழுத்து அடைத்து முன்போலவே பூட்டிவிட்டுச்சென் றாள். அவள் காட்டிய வழியில் நடந்த இளம்வழுதி குதிரை யைக் கண்டு மகிழ்வுற்றான். ஊர் புறம் கடக்கும்வரை, மேதுவாகவே சென்று, இனி அஞ்சுவதற்கு எதுவுமில்லை என் த துணிவு வந்ததும். குதிரையை வேகமாகச் செலுத் தினான். இப்போது அவன் உள்ளத்திலே குழப்பமில்லை. அல்லுக்கு கவலையுமில்ல்ை, அறிவிலே தேளிவு பிறந் திருந்து மனசில் ஊக்கமும் உற்சாகமும் நிறிைந்து வி. ைஅவனுள் மகத்தானதோர் புதுச்சக்தி தோன்றி அவனை இயக்குவது போலிருந்தது, இருளைக் கிழித்துச் செல்லும் சூத வளிபோல முன்னே, முன்னே ஓடி துரத்தை விழுங்கிச் சென்றது, அவன் குதிரை. அன்னையிட்ட தீ

பழம் பாண் நாட் டின் கூற்றங்களும் உள்நாடுகளும் குழப்பத்திலும் பீதியிலும் சிக்கித்திண்டாடின. மதுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/145&oldid=905934" இலிருந்து மீள்விக்கப்பட்டது