பக்கம்:விடிவெள்ளி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ( விடிவெள்ளி' அவளுக்கு ஏற்பட்டதும், அவனைத் தனிவழியே அனுப்பி வைத்தாள் அந் நற்றாய். அவளைப் பிரிந்து மகன் சென்ற நாள் முதல், தாய்ப் பாசம் அவன் நினைவை அவள் உள்ளத்தில் பசுமையாய்க் காப்பாற்றியது. அவன் உயர்நிலை அடைவான்-காலமும் தக்கார் துணையும்தான் தேவை-என்று அவள் மனம் அடிக்கடி கூறியது, அவனைக் காணவேண்டும் என்ற ஆசை அவ்வப்போது தலை தூக்கத்தான் செய்தது. ஆயினும், எடுத்த காரியத்தைவெற்றிகரமாக முடிப்பதற்கு ஆவன செய்துகொண்டு அவன் திரும்பிவந்தால் போதும். அப்படித்தான் அவன் திரும்புவான்-என்றும் அவள் எண்ணினாள் , - : - சில நாட்களாக அவள் உள்ளத்திலே அர்த்தமற்ற, தெளிவற்ற குழப்சம்வந்து சூழத்தலைப்பட்டது. வானில் ஒரு மூலையில் பிறக்கும் சிறு மேகம் வர வரப் பெரிதா கி. எங்கும் பரந்து கறுத்து சோர்வும் கலக்கமும் தரக்கூடிய அழுக்குப்ப-லம் போன்று கனத்துக் கவிந்து விடுவது போல, அந்த ஒற்றை உணர்வு-உள் மனசின் உத்துதலால் பிறந்த ஏதோ ஒரு உணர்ச்சிக் குழப்பம்-அவளது உள்ள ம் முழுவதையும் நிறைத்து, வேற்றியால் கனத்து, அமைதியை அடைத்து வந்தது. தன் மகனைத்தான் இனி மேல் ஒருமுறைக் கூடக் கண்ணால் காண முடியாமவே .ே கலாம் என்ற உணர்வு ஏனோ அவளுக்கு ஏற்பட லாயிற்று. அன்றும் அவ்வுணர்வே மேலோங்கி நின்றது அவ ளுக்கு அன்று ஏதோ விபரீதம் நேரத்தான் போகிறது என்று அன்னத்தின் உள்ளுணர்வு பேசியது. இனம் வுழுதி இங்கிருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்குமே!’ என்ற ஆசை அடிக்கடி அரித்துக்கொண்டிருந்தது அவன் வரமாட் டானா, திடீரென்று வந்து வெளியே நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/149&oldid=905941" இலிருந்து மீள்விக்கப்பட்டது