பக்கம்:விடிவெள்ளி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 விடிவெள்ளி சகுக்கிருட்டைத் திரட்டி, உருக்கின் வலிமையை அதற்கு ஏற்றி, உயிர்த் துடிப்பையும் புகுத்தி அற்புதமான உருவில் படைத்துவிட்டது போல் திகழ்ந்த அழகிய, எடுப்பும் நிறைந்த, குதிரை ஒன்று வீதியில் பாய்ந்து வந்தது இரக்கம் எனும் ஓர் உணர்வு இருப்பதையே அறிந்திராத அரக்கன் போன்ற களப்பிரன் ஒருவன் அதன் மீதிருந்தான், கருங்கல்லால் செய்த சிலை போன்ற அவன் முகத்தில் தீத் துண்டங்கள் போல் மிளிர்ந்தன பெரிய விழிகள். குடியினாலும் கொடுமையினாலும் சிவந்திருந்: தன் அன்ை. தாயைப் பிரிந்த மகவொன்று அழுதுகொண்டு வீதி, யில் தள்ளாடி நடந்தது. பாபம் எதையும் அறியா அச் சின்னஞ்சிறு உருவத்தின் மீது மறலியின் திரு உருவம் போன்ற குதிரையைத் திருப்ப எத்தனித்தான் அதன் மேலிருந்த முரடன். வழுதியின் தாய் அதை உணர்ந்தாள். அவள் பெண். உயிர்குலத்தின் தாய். அன்னட பொறுமையை, தியாகத் தைப் போற்றுகின்ற மென்மையின் திருக்கோயில், தன் உயிரை:ே உலகினுக்கு உவந்தளிக்கும் பண்பு பெற்ற தமிழன்னை. . அவள் உள்ளம் துடித்தது. உணர்வு கொதித்தது. அங்கங்கள் வேக இயக்கம் பெற்றன. ஒரு கன நிகழ்ச்சி. அவன் கைகள் பிடித்திருந்த வேல் கனப்பிரனின் நெஞ்சில் பாய்ந்தது, அவன் என்ன ஆனான் என்று கவனிக்ககூடக் காத்திராமல் அன்னம் குழந்தையைப் பற்றி எடுக்கக் தாவிப் பாய்ந்தாள். அதே வேளையில் கார் மேனிப் பெருங் குதிரையின் கால் ஒன்று. அவளை மோதியது. அவள் தரையில் வீழ்ந்தாள் குதிரை யின் இரும்புக் கால்களில் ஒன்று அவள் மார்பில் மிதித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/151&oldid=905947" இலிருந்து மீள்விக்கப்பட்டது