பக்கம்:விடிவெள்ளி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ) 151 துவைத்தது. பின் வந்த மறுகால் அவ்வுடலைப் பத்தாடி விட்டு, முன் பாய்ந்தது. குழந்தை நகர்ந்துவிட்டது. அதன் நலனில் அக்கதை கொண்டு பாய்ந்த அன்னம் தான் மாய்ந்துபட்டாள்! இ 獸 纖 இளம்வழுதி வந்து சேர்ந்தான், கடுங்காற்றுப்போல. செவ்விருக்கை நாடு இந்த நிலைக்கு வந்திருக்கும் என்று கனவினும் கருதியதில்லை அவன். தன்து தாய் இப்படி ஒரு முடிவை அடைந்திருப்பாள் என்று அவன் எவ்வாறு எண்ணியிருக்க முடியும்? அமுதவல்லி அருளைப் பெற்று, வேகமாகக் கிளம்பிய வழுதி அன்னையின் அன்பு முகத்தைக் காண வேண்டும் என்ற துடிப்போடு பிரயாணம் செய்தான். பசி, வருத்தம் பார்த்தானில்லை; சுகமாகப் படுத்துக் கண் துஞ்ச வேண் டும் என்று கருதினானில்லை. வழியில் எதிர்ப்பட்ட இன்னல்களை எல்லாம் பெரிது படுத்தினானில்லை. அவ்வாறு வந்தவனுக்ககக் காத்திருந்த காட்சியோ..? பேய்கள் விளையாடிய சுடுகாடு மாதிரி இருந்தது செவ்விருக்கை நாடு. தீயின் செந்தாக்குகள் அங்குமிங்கும், கொளளிவாய்ப் பிசாசுகள் மாதிரி, குதித்தாடி மின்னின. உயிரிழந்தோரும், குறை உடலினரும் கோரமாகக் கிடந் தனர் எங்கும், - - - - அவன் வேகமாக சென்றான், தன் தாய் இருக்க வேண்டிய வீடு நோக்கி. அவள் உடல் கிடந்த நிலையைக் கண்ட தும் அவன் இதயம் வெடித்து விடாமலிருந்தது அவனுக்கு அதிசயமாகத்தான் பட்டது. அவன் கண்கள் கலங்கின; உள்ளம் துயரத்தால் கனத்தது. பின் கோபத்தால் உறைந்தது. அவன் கைகள் வாளை இறுகப் பற்றின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/152&oldid=905949" இலிருந்து மீள்விக்கப்பட்டது