பக்கம்:விடிவெள்ளி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 0 விடிவெள்ளி அவன் மனம் கோதித்தது. குருதி கொதித்தது. கொதி நிலைபெற்ற எண்ணங்கள் அவன் மூளையைத் தகித்தன. - அவன் உணர்வு கொதிப்புற்றது. அவன் நெஞ்சு அனல் மூச்சை உயிர்த்தது. அவனே குமைத்து கு முறும் எரிமலையாகி நின்றான். - அவன் உள்ளம் இசைத்தது: வாழ்க எம் அன்னை: வாழ்க நின் புகழ் உன் திரு வருள் என்றும் எனக்குக் கிட்டுக! ஆற்றல் மிக்கோர் வாழ்ந்து, தர்மம் வளர்த்துச்சிறப்புறப் போற்றிய இத்திரு. நாட்டில் மாற்றவர் புகுந்தனர்; களங்கம் விதைத்தனர்; தீமையே வளர்த்தனர். இத் த்ாய்த்திரு நாட்டை, பேய்த் தனம் பெற்றோர்-உயர் பண்பினை அறியார்-இழி தன வெறியர் பிடியிலிருந்து மீட்டே தீர்வேன். இனியும்' பொறுத்துக் கொண்டு வாழ்வது ஒரு வாழ்வு ஆகுமா? வெற்றி பெறுவோம், இல்லையேல், சமீரினில் வீழ்வோம். அன்னையின் பாதங்களைத் தொட்டு வணங்கினான் இளம்வழுதி, அங்கிருந்து அகன்றான். 5. குமுறும் எரிமலை அச் சிறுபயல் எங்கிருந்தாலும் சரி; அவனைத் தேடிப்பிடித்துக் கொல்ல வேண்டியது உங்கள் கடமை அப்படி அவன் எங்கே பறந்து பதுங்கி விடப்போகிறான்? இத்தென்னாட்டின் ஒரு மூலையில் தானே அலை வான்: என்று உறுமினார் மாறன் காரி. - தனது திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உரிய காலம் வந்து விட்டது என்ற களிப்புடன் வீடு திரும்பிய காரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/153&oldid=905951" இலிருந்து மீள்விக்கப்பட்டது