பக்கம்:விடிவெள்ளி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 விடிவெள்ளி செயல் புரிந்திருக்கக் கூடும் என்று ஒருவரும் ஊகிக்க முடியவில்லை மாறன் காரி அமுதவல்லியைப் பற்றி சந்தேகம் கொள்ளவேயில்லை எப்படி அவர் அவளைச் சந்தேகிக்க முடியும்? எவனோ ஒருவன் தான் உண்ட சோற்றுக்குத் துரோகம் செய்திருக்கிறான் என்றே அவர் நம்பினார். "எவளோ ஒருத்தி அவ்விதம் செய்திருக்கலாம் என்று அவர் அறிவு உணர்த்தவுமில்லை. "இதை பின்னர் கவனித்துக் கொள்ளலாம் முதலில் அவனைப் பிடித்து, ஒழித்துக்கட்ட வேண்டும்' என்று கருதினார் காரி கழுகிடமிருந்து அல்பக் கோழிக்குஞ்சு தப்பிவிட முடியுமோ? ஒரு முறை பிடியிலிருந்து நழுவி விட்ட தும், பிழைத்தோம் என்று மனப்பால் குடிப்பது இயல்பு, தன் தவதை அவன் விரைவிலேயே உணர்வான்' என்த்து அவர் மனம் இளம்வழுதியை இனம் கண்டு கொள்ள முடியும் என்று உறுதியாகக் கூறியவன் அவருடைய ஆட்சளில் ஒரே ஒருவன்தாள் இருந்தான் அதற்காக மாறன் காரி வருத்தப்படவில்லை. உங்கனைவிட நன்றியுள்ள வேடன் இருக்கிறான். அவனிடமிருந்து வழுதி தப்பி ஓடுவது என்பது நடக்க முடியாத செயலேயாகும் என்று அவர் திடமாக அறிவித் தார். வேடன் எனும் வேட்டை நாயைத்தான் அவர் குறிப்பீட்டார். - வேடன் குறி தவறாது பாய்ந்து கவ்விப் பற்றக்கூடிய பேராற்றல் பெற்ற நாய்தான். காற்றோடு போட்டியிட் டுக் கடுவேகத்தில் செல்லும திறன் அதற்கு உண்டு. வழுதி தங்கியிருந்த அறைக்குள் அந்நாய் அழைத்துச் செல்லப்பட்டது. அவன் படுத்திருந்த இடத்தையும், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/155&oldid=905955" இலிருந்து மீள்விக்கப்பட்டது