பக்கம்:விடிவெள்ளி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 விடிவெள்ளி 'நீங்கள் உதவி புரிவது பற்றி ஏதாவது சொன்னீர் க்ளோ அவனிடம்?' என்று விவரம் தெரிந்து கொள்ளும் ஆவலோடு பேசினான் கணபதி. ஒரக்கண்ணால் அவனை எடை போட்டவாறே அறி வித்தார் காரி: முடியும் என்று சொல்லவில்லை. முடியாது என்றும் கூறவில்லை. ஒய்வு பெறு, பின்னர் பேசுவோம் என்து சொல்லியிருந்தேன். அதற்குள் வேறு முக்கிய அலுவலின் பேரில் நான் வெளியூர் சென்றுவிட்டேன்’ திரும்பி வந்தபோது இவன் இங்கே இல்லை. எங்கு போனானோ, யாருக்கும் தெரியவில்லை: இளம்வழுதி ஏன் அப்படிச் செய்தான் என்ற ஐயம் சாத்தனுக்கு ஏற்பட்டது. இவர் பேச்சில் உண்மை எல் வனவு இருக்குமோ என்றும் அவன் மனம் சந்தேகித்தது. அவன் வி.ைபெற்றுக்கொள்ள முயன்றான். ஆனால், மாறன்காரியோ விருந்து உண்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்ற முறை வந்து அவன் உடனடியாகத் திரும்பிச் சென்றுவிட்டதற்காக அவர் பெரிதும் குறைபட்டுக் கொண்டார். ஆகவே அவன் அங்கு தங்க வேண்டியதும் அவசியமாயிற்று. அவ்வீட்டில், துள்ளலும் துடிப்புமாக ஆடிக்களித்த சிறுமி முத்து, சாத்தன் கணபதியின் கவனத்தைக் கவர்ந் தாள். அவனுக்கு என்றுமே குழந்தைகளிடம் பாசம் அதிகம். விளையாட்டுப் பிள்ளையான முத்துவிடம் அவன் அன்பு காட்டியது அதிசயமல்லதான். அந்தச் சிறுபெண்ணை அழைத்துக்கொண்டு அவன் அங்குமிங்கும் அலைந்து வேடிக்கை காட்டி வந்தான், தோட்டத்து வீட்டின் அருகே வந்ததும் அவள் பயந்தவள் போல் முகத்தை வைத்துக்கொண்டு, தாம் அங்கே போகக் கூடாது!’ என்று சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/157&oldid=905959" இலிருந்து மீள்விக்கப்பட்டது