பக்கம்:விடிவெள்ளி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 161 சிலர் சேர்ந்தனர். பலர் ஆகினர். ஒருட டை ஆயிற்று. தடந்தோளினர்; வீரம் செறிந்தவர்: வானேந்திய கையி னர். ஊழையும் வாதுக்கு இழுக்கும் உரமேறிய தெஞ் இனர். அழிவை விடுத்துச் சென்ற களப்பிரர்களைத் தேடி, அவர்கள் போன வழியையே தொடர்ந்தார்கள் வீர மறவர்கள். அவர்கள் பார்வையில் பட்ட களப்பிரர்கன் தப்பியதில்லை, கொடியரைக் கொன்றுவிட்டு, குதிரை களையும் ஆயுதங்களையும் வீரர்கள் தங்களுடையதாக்கி, நாவலிட்டுக் களித்தார்கள். சிலசமயம் இவ் வீரர்களில் சிலர் இறக்கவும் நேர்ந்தது. . ஊர் ஊராகச் சென்று வீட்டுக்கு ஒரு வீரன் தரும்படி வேண்டினான் வழுதி. அவன் முயற்சியும் ஊக்கமும் பலனளியாது.போகவில்லை. - அவனைப் பற்றிய செய்திகள் சிறிது சிறிதாகப் பரவி வந்தன. அவனை மடக்கிக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு களப்பிரர்கள் திரிந்தனர். இளம்வழுதி எதிர்பாராதபோது சாத்தன் கணபதி வந்து சேர்ந்தான். நண்பனை எப்படியும் கண்டே தீர் வது என்ற உறுதியோடு கிளம்பிய அவன் சுற்றாத இடங் கள் இல்லை; அனுபவியாத தொல்லைகள் கிடையா. எனினும், மன உறுதியோடு முயன்றான் அவன். வழுதி யைக் கண்டு அகமகிழ்ந்தான். மாறன்காரியின் ஆட்கள் தனக்கு முன்னதாகவே அவனைக் கண்டு கொன்றிருப்பார் களோ என்ற பயம் அவனுக்கு இருந்தது. அதனால் நண்பனை உயிரோடு சந்தித்ததும் அவன் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. குதிரை மீதிருந்து குதித்து இறங்கி வழுதியை அன்போடு தழுவிக் கொண்டான் அவன். இருவரும் ஒரிடத்தில் அமர்ந்து மாறன்காரியின் வஞ்சகப் போக்கு பற்றிப் பேசினர். பொழுது இருண்டு கேண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/162&oldid=905971" இலிருந்து மீள்விக்கப்பட்டது