பக்கம்:விடிவெள்ளி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 0 விடிவெள்ளி வழுதியைத் தேடிவந்த வீரன் ஒருவன், சற்றுத் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் கலசப்பிரர்கள் தங்கி யிருக்கிறார்கள் என்று அறிவித்தான். இளம்வழுதி அந்: தத்திக்கில் தான் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந் தான். இப்போது அது முடியாது தனது ஆட்களைத் திரட்டிக் கொண்டு நள்ளிரவில்தான் அவர்களைத் தாக்க வேண்டும்; அவ்வேளையில் களப்பிரர்கள் குடிமயக்கத் தோடு ஆழ்ந்து துரங்கிக் கொண்டிருப்பார்கள் என்று அலன் கருதினான். - - - - ஆட்களைத் தயாராக இருக்கும்:டிச் சொல்வி வீரனை அனுப்பிவிட்டு, வழுதியும் சாத்தனும் எதிர் திசை யில் சென்றனர். சட்டென்று சாத்தன் குதிரையை நிறுத்தினான். அவன் செவி கூர்மையாங் எதையோ கிரகிப்பதற்காக ஒரு திசை நோக்கித் திரும்பி நிலைத்தது. 'வழுதி, உற்றுக் கேள். நமக்கு எதிர்ப் புறமிருந்தும் குதிரைகள் வருகின்றன. அவற்றின் குளம்பொலி மெது வாகக் காதில் படுகிறது' என்றான் அவன். - - - களப்பிரர்களில் வேறு பிரிவினர் வருகிறார்கள்ோ என்னவோ?’ என்று வழுதி சொன்னான். - 'இல்லை. மாறன் காரியின் ஆட்கள்தான் வருகிறார் கள் நாயின் குரைப்பும் இடைக்கிடை எழுகிறது" என்று கூறினான் சாத் தன். காற்று அத்திக்கு நோக்கியே வீசு கிறது. வேட்டை நாய் எளிதில் மோப்பம் பிடித்திருக் கும். ஆகவே அவர்கள் இங்குதான் வருகிறார்கள் என்று நிச்சயமாகப் புரிகிறது என்றான் பரபரப்பாக. ஒன்றும் கெட்டுவிடவில்லை. நாம் தப்பிவிடலாம்' என்று சொல்லிய வழுதி குறுக்கே பாய்ந்தான். சாத்தன் குதிரையும் பின் தொடர்ந்தது. “ . . இருவரும் குதிரைகளை மேடு பள்ளங்களில் எல்லாம் செலுத்தினார்கள். சிறிது தொலைவிலேயே ஆறு குறுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/163&oldid=905973" இலிருந்து மீள்விக்கப்பட்டது