பக்கம்:விடிவெள்ளி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ஐ விடிவெள்ளி இருவரும் அந்த இடத்தை அடைவதில் தாமதம் எது வும் செய்யவில்லை. வழுதியின் யூகம் தவ தவுமில்லை. அது ஒரு குடில்தான் அதனுள் எரிந்துகொண்டிருந்த சிறு விளக்கின் வெளிச்சம்தான் அவர்களை வசீகரித்தது. வழுதி கதவைத் தட்டினான். மூதாட்டி ஒருத்தி, 'வித்துவிட்டாயா என்று ஆவலுடன கேட்டுக்கொண்டே கதவைத் திறந்து, வாசலில் வந்து நின்றாள். நீங்கள் யார் வரவையோ எதிர்நோக்கிக் காத்திருப்ப தாகத் தெரிகிறது. ஆனால் நாங்கள் வேறு வழிப்போக்கர் கள். அலைந்து திரிந்ததால் மிக்க பசியோடிருக்கிறோம் உணவு அளித்தால் நன்றியுடன் ஏற்றுக்கொள்வோம். என்று வழுதி தெரிவித்தான். - . அந்த அம்மையார் இருவரையும் அன்போடு விட்டி னுள் அழைத்துச் சென்றாள். கனிவுடன் உபசரித்தாள். தான் என் மகனை எதிர்பார்த்திருந்தேன். நீங்கள் வந் திருக்கிறீர்கள் சிறிது பழைய அமுதுதான் இருக்கிறது. என்னால் தர முடிந்ததை உங்களுக்கு இடுகிறேன்' என்று கூறி அமுது படைத்தாள். - வழுதியும் சாத்தனும் தங்கள் அருகிலேயே வாட்களை வைத்துக்கொண்டு சாப்பிடுவதைக் கண்டதும் அவள் அதிசயித்தாள். உங்களுக்கு ஏன் இந்தப்பயம்?' என்று கேட்டாள் எந்நேரத்திலும் களப்பிரர்கள் வந்துவிடலாம் என்ற பயம்தான். அவர்கள் எங்கள் எதிரிகள். அவர்களைத் தொலைத்துக் கட்டுவதுதான் எங்கள் நோக்கம்' என்று வழுதி உணர்ச்சியோடு சொன்னான். . அப்படியானால் நீங்கள் ஏன் வழுதியோடு சேர்நது கொள்ளவில்லை இன்னும்?' என்று அந்தக் கிழவி கேட்டாள். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/165&oldid=905977" இலிருந்து மீள்விக்கப்பட்டது