பக்கம்:விடிவெள்ளி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 0 187 உணர்வு துடித்தது. ஆயினும் பேச்சு எதுவும் எழவில்லை, அவர்கள் வாயிலிருந்து அவர்கள் எத்தனை பேர் என்பதைப் பிறர் உணர்ந்து கொள்ள முடியாது. எனினும் எதிரிகள் கண்டு கொன் வார்களோ என்று ஐயம் தூண்டிய விழிப்பு உணர்வோடு அவர்கள் சென்றார்கள். ஒவ்வொருவர் கையிலும் உருவிய வாள் இருந்தது. அதன் உறுதி இருந்தது அவர்களது உள்ளத்தில். அதன் மீது ஒளிபட்ட tல் தெரிக்கக்கூடி: மினு மினுப்பு அவ்ர்களின் விழிகளில் சு. ரிட்டது அவர்கள் வந்த தாக்குவார்கள் என்று சற்றேனும் எண் ணியிராத பகைவர்களை, அவர்கள் சிறிதும் எதிர் பாராத வேவனயில் தாக்கி ஒழித்துக் கட்டும் நோக்கத் தோடுதான் முன்னேறிச் சென்றது அந்தப் படை. திருட்டுத்தனமாகக் கொன்று கொலை செய்ய முற்படு வதாக அவர்கள் கருதவில்லை. நாட்டைக் கெடுத்து வாழும் நச்சுப் பிராணிகளை அழிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவர்களுக்கு, இளம்வழுதி ஏறுபோல் நடந்து முன்சென்றான். அவ னுக்குப் பாதுகாவலர்போல, சாத்தனும் வீரனும் அவன்ைத் தொடர்ந்தனர். அவர்களோடு சென்றது சிறு படை தான். ஆனால் ஒவ்வொருவரும் வைர நெஞ்சினர்; திண்ணிய புயத்தினர்; வலிய உடலினர்; வீர மறக்குலத் தினர். - - மறவியின் விருந்தாக மாறப்போவதை உணராத களப்பிரர்கள், வெறித்தனமாக ஆடி அயர்ந்துவிட்டு, 'அடித்துப் போட்டவர்கள் போல்-கால்மாடு தலை மாடாகக் கிடந்தார்கள். மிதமிஞ்சிய மதுக்குடியும் தன் சக்தியைக் காட்டியிருந்தது. அவர்கள் ஆடிய கூத்தின் சின்னங்களாக மதுச்சாடிகளும் மொந்தைகளும் மாமிசத் துண்டங்களும் கண்டபடி சிதறிக்கிட்ந்தன. அவர்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/168&oldid=905983" இலிருந்து மீள்விக்கப்பட்டது