பக்கம்:விடிவெள்ளி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Յ ը விடிவெள்ளி பொதுத்தவரையில் வாழ்க்கை எவ்வளவு வேகமாக ஓடி ஒடுங்கிவிட்டது! அதை எண்ண எண்ண வழுதியின் நெஞ்சு வெடித்துவிடும் போல் தோன்றியது. வீரனின் தாயை அவன் மறக்க முடியுமா? இருட்டிய தும் வீடு வரக் காணோமே என்று கவலையோடு வழி பார்த்துக் காத்திருத்த அக்கிழ அன்னை தன் மகனின் மரணத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வாள்? முதிய பரு வத்தில் அவளுக்கு இந்த அதிர்ச்சி ஏன் தான் ஏற்பட வேண்டுமோ? தனது தனி மகனின் சாவுக்கு வழுதியே காரணம் என்று அவள் எண்ணவும் கூடுமே! மகனைப் பறிகொடுத்த துக்கத்தால், வேதனைத் தீயில் வதங்கக் கூடிய அந்தத் தாயுன் னம் அவனைச் சபிக்காம்லா இருக் கும்?... வழுதி சிலையாகிவிட்டது போல் தின்றான் அவன் தோழர்களும் வாய் திறவாமல் நின்றார்கள். இரவு கனத்துக் கவிந்து கிடந்தது. தன்னலம் கரு தாது வாழ்ந்து பிறருக்காக உயிர் நீத்த வீரனுக்காக இயற்கையே கண்ணிர் கிந்தியது போல, வானவெளியில் இந்து வீழ்ந்த ஒரு நட்சத்திரம் ஒளிக்கோடு கீச்சி நழுவி யது; இருளின் ஆழ்த்தில் மங்கி மறைந்தது. காலம் மெதுவாய் சோகமாய் தளர்நடை நடந்துகொண்டிருந் ఢ్ - 'வழுதி!' சாத்தன் கணபதி நண்பனின் தோள் மீது கைவைத்து மெதுவாக அழைத்தான். வழுதி அசையாமலே நின்றான். 'வழுதி, இவனை நாம் இழந்து விட்டது ஆற்ற முடி யாத துயரம் தருகிறது. ஆனாலும் அதற்காக மனம் ஒடிந்து செயல் திறம் இழந்து நிற்கலாமா? நமது கடமை களைச் செய்வோம் வா' என்று அறிவித்தான் சாத்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/171&oldid=905992" இலிருந்து மீள்விக்கப்பட்டது