பக்கம்:விடிவெள்ளி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1?8 விடிவெள்ளி பிறந்த நாட்டின்மீது பற்றுதல் உங்களை ப்போன்ற பெரியவர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்கிற விதி எதுவும் இல்லையே?’ என்று நையாண்டியாகக் கேட்டான் அவள். - அனல் மின்னும் பார்வையோடு அவளைக் கடுகடுப் பாக நோக்கினார் அவர். நீங்கள் செய்து வருகிற குள்ள நரி வேலைகள் எல்லாம் அம்பலத்துக்கு வந்தால் விஷ்ணு சிம்மனின் கதி என்ன ஆகும் தெரியுமா? உங்கள் தங்கை யின் ல்ாழ்வு எப்படிமுடியும் என்பதுபற்றி நீங்கள் என்றா வது எண்ணியது உண்டோ?' என்று கேட்டார். நேர்மையற்ற உங்களின் சூழ்ச்சிகள் வெளிப்படுகிற போது நாட்டு மக்கள் உங்களுக்கு உரிய நீதியை வழங்கு வதற்குத் தயங்க மாட்டார்கள். வடிகட்டிய தன்னலத் தோடு செயல்புரிந்து வருகிறீர்கள் நீங்களும், உங்கனைச் சேர்ந்தவர்களும், உயர்வடைந்தால்போதும் என்ற ஆசை யோடு நாட்டைக் காட்டிக் கொடுத்து வந்ததோடு, நாட் டினரின் வாழ்வைக் கெடுக்கும் நஞ்சாகவும் விளங்கு கிறீர்கள். நீங்களும் உங்களைப் போன்றவர்களும் நல்ல மரத்தில் பாயும் புல்லுருவிகளேதான்! மங்கையர்க்கரசி தன் ஆத்திரத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தாள். மாறன் காரி சிரித்தார். அமைதியை இழந்துவிடா மலே சிரித்தார். இவ்வளவு தானா? இன்னும் ஏதேனும் சொல்ல வேண்டுமா?’ என்று கேட்டார். - "உங்கள் உதவியைப் பெற்றுவிடலாம். என்று எண்ணி வந்தேனே? என்ன பேதமை!’ என முனங் கினாள் அவள். உங்கள் அணிகலன் அது' என்று கெண்டை பண்ணினார் பெரியவர். ... . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/179&oldid=906005" இலிருந்து மீள்விக்கப்பட்டது