பக்கம்:விடிவெள்ளி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 183 மங்கையர்க்கரசி பயணம் செய்த குதிரை வண்டிக்கு நேர்ந்த விபத்தை தெய்வாதீனம் என்று சொல்ல முடியாது. அரக்க எண்ணம் பெற்ற மனிதர் செய்கையால் ஏற்பட்டதுதான் அது. நரி மூளையும் ஒநாய்த்தனமும் பெற்றிருந்த மாறன் காரி புறப்படுகையில் குறுக்கிட்ட மங்கையர்க்கரசியை ஒழித்துவிட ஆசைப்பட்டார். அந்த எண்னம் செயல்படும்போது பிறருக்கு சந்தேகம் எழாத விதமாய் முடிந்துவிட வேண்டும் என்றும் கருதினார். காட்டுப் பாதையில் வண்டி த.-ம்புரண்டு பெரும் பள்ளத் தில் உருண்டு விட்டது; குடை கவிழ்ந்த வண்டியினுள் இருந்தவள் அதனோடு சேர்ந்து சிதைந்து உருக்குலைந்து போனான் என்று எண்ணுவார்கள்-எண்ண வேண்டும்என்பது அவர் நோக்கம். அவ்விதம் யோசனை கூறி, வழி வகுத்துக் கொடுத்தே அவர் தம்முடைய ஆட்கனை அனுப்பி வைத்தார். அவர்களும் திறமையோடுதான் செயலாற்றினார்கள். மரத்தின் பின் பதுங்கி நின்று, வண்டிக்காரன் மண்டை யில் ஓங்கி அடித்தான் ஒருவன். வண்டிக்காரன் ஒரு அலத லோடு கீழே விழுந்தான். வேறொருவன் குதிரைகளை வண்டியோடு பிணைத்திருந்த கயிறுகளை லாவக்மாக அறுத்துவிட்டான். மற்றொருவன் ஒரு சக்கரத்தின் அச்சானியை வேகமாக உருவினான். மூவரும் சேர்ந்து, குதிரைகளை மிரட்டி பள்ளத்தை நோக்கி விரட்டி 经£”f了高芬。 வண்டி பாதையை விட்டு விலகி பள்ளத்துள் சரியத் தொடங்கியதைக் கண்டதும் அவர்கள் அங்கேயே நிற்க விரும்பாமல் தங்கள் வழியில் வேகமாய்த் திரும்பினார்கள். சற்றுத் தொலைவில் குதிரைகள் வருவது போன் பெருத்த ஒசை பொங்கி எழுந்து காற்றோடு மிதந்து வந்ததும் அவர்கள் பயம் கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. தங்களுடைய செயலின் முடிவைக் கண்டு களிப்பதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/184&oldid=906019" இலிருந்து மீள்விக்கப்பட்டது