பக்கம்:விடிவெள்ளி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் 287 அல்ல. முன்னேறி வந்த குதிரைகளின் குளம்பொலிதான் அது களப்பிர வீரர்கள் பலரும், வரகுணத்தேவரின் ஆட்கள் சிலரும் குதிரைகளில் வந்துகொண்டிருந்தார்கள். வரகுணத்தேவர் தான் தப்பி, மேலும் உயர்வடைவ தற்காக ஒரு சூழ்ச்சி செய்தார். கூற்றன் நாயனார் அளித்த விருந்தின்போது'- பூ சுந்தரி நடனம் ஆடிக்கொண் டிருக்கையில். மறைந்திருந்து சட்டியும் ஒலையும் எறிந்த வனைப் பிடித்துக் கொடுக்கத் தவறிவிட்டதிலிருந்து களப் பிரப் பெரியவர்கள் தேவரிடம் கொண்டிருத்த மதிப்பில் மாற்றம் காட்டலானார்கள். அதை அறிந்தும் அறியாதவர் போல் அவர்கனோடு பழகி வந்தார். அவர். மங்கி வந்த மதிப்பை மீண்டும் உயர்த்துவதற்கு ஏற்ற காலம் வரும் என்று காத்திருந்த்ார். - அவருக்கு அந்த வாய்ப்பு மாறன் காரி உருவில் வத்து சேர்ந்தது. காரி தமது ஆசை நிறைந்த திட்டத்தைத் தேங் ரிடம் கூறி உதவி நாடினார். ஆகா' என்று தலையசைத்த தேவரின் மூளை வேகமாக வேலை செய்தது. இப்படி ஒது பேராசை தினைப்போடு நம்மிடம் வந்தான் இன்ம்வழுதி என்கிற ஒருவன். நம் பிடியிலிருந்து நழுவி விட்டான். இப்போது இந்தக் கிழவர் வந்திருக்கிறார். இவரையும் விட் டுவிட்ட ல் தம்மைப் போன்ற படையன் வேறு எவனுமே இருக்க முடியாது என்று அவர் தீர்மானித்தார். உதவி செய்வதாக வாக்களித்து மாதன் காரியை அனுப் பியதும், நம்பிக்கைத் துரேர்கியாக மாறி அவரைக் காட்டிக் கொடுக்க முன்வந்தார் வரகுணத் தேவர். அவரது பேச்சைக் கேட்டான் கூற்றன் நாகனார். களப்பிரர்களை ஒழித்துவிட்டு, பாண்டி நாட்டில் மீன் கொடியைப் பதக்க விடுவதற்கு மாநன்காசி சூழ்ச்சிகன் செய்து வருகிறார்; அவருடைய கையாள் தான் விருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/188&oldid=906026" இலிருந்து மீள்விக்கப்பட்டது