பக்கம்:விடிவெள்ளி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 0 விடிவெள்ளி பூசிய அற்புதமாக விளங்கிய அம்முகத்தையே பார்த்து நின்ற வழுதி இள நகை பூத்தான். @ 鬱 இ எழுச்சியுற்ற பாண்டிய வீரர்களின் பெரும் படை, களப்பிரர்களின் தலைநகர் நோக்கிக் கிளம்பியது. தென்ன கத்திலிருந்து திரண்டு வந்த வீரர்களோடு மதுரை மாநகர் தந்த வலியவர்கள் எண்ணற்றோர் கூடியிருந்தனர் மங்கை யர்க்கரசியின் முயற்சியால் குழுமிய வீரர்கள் சேர்ந்திருந் தனர். அவள் தங்கையின் கணவன் விஷ்ணுசிம்மன் முதல் போரிலேயே மாண்டு மடிந்து போனான். துறவி அடியார்க்கு நல்லான் திரட்டித்தந்த சூரர்களும் வந்தனர். ஒடுக்கிவிட முடியாத ஆற்றல் பெற்ற படை, எதிர்பாராத போது களப்பிரர் தலைநகரை முற்றுகையிட்டது. கயவர் களை முறியடித்து, அந்த அணிநகரைத் தீயினுக்கு இரை யாக்கி களித்தது . பொங்கி எழுந்த கோரப் பெருந்தீ, பாண்டி நாட்டைச் சீரழித்து வந்த வெறியர்களின் ஆதிக்கத்துக்கு தமிழர் வைத்த கொள்ளியாக முடிந்தது. வெற்றியோடு மதுரை திரும்பிய வழுதி மாமூல னாரின் ஆசியோடும், மக்களின் ஆதரவோடும் முடி புனைந்தான். பாண்டியன் கடுங்கோன் என்ற சிறப்புப் பெயர் பூண்டான். - 尊 இ. 穩

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/197&oldid=906046" இலிருந்து மீள்விக்கப்பட்டது