பக்கம்:விடிவெள்ளி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக் கண்ணன் இ 19 'நல்ல இடம் பார்த்தாயே ஒளிந்து கிடப்பதற்கு இது விஷ்ணு சிம்மனின் இல்லம் ஆயிற்றே!’ என்று அவள் கூறினாள். அவன் ஒன்றும் பேசவில்லை. சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவளும் மெளனமாக நின் நாள் பிறகு சொன்ன ஸ். ஆட்கள் சந்தேகமடைந்து ஒவ்வொரு மாளிகையின் பின்புறமெல்லாம் தேட வந்தாலும் வரலாம். எதற்கும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது தானே? தீ, இங்கேயே நிற்கவேண்டாம் பாதுகாப்பான இடம் ஒன்று. காட்டுகிறேன், வா! அவள் முன்னால் நடந்தாள். அவனும் அவள் பின்னா லேயே சென்றான். அவன் செய்கையில் தீய நினைவு கலந் திருக்குமோ என்ற ஐயம் அவள் மனதிலே சிறந்தது. "சீ என்ன நினைப்பு' என்று கடிந்தது மனசின் ஒரு பகுதி. ஒரு இடத்தில் சென்ற போது மாடம் ஒன்றிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றை அவள் முகத்தில் வருடியது. அப்பொழுது அவன் அம்முகத்தை ஒருவாறு அறிய முடிந் தது அருள் பூத்த முகம் அது. அன்பு தவழும் விழிகளும் மனநிறைவு. அம்முகத்துக்குத் தனி ரக எழில் சேர்ந்தன. அவள் முதியவன் அல்லன். எனின் இளை பவளும் அல்ல. தோட்டத்தின் ஒரு புறத்தில் சிறு வீடு போன்த அமைப்பு தென்பட்டது அதன் கதவைத் திறந்து அவனை உள்ளே அனுப்பி வைத்தாள் அவள். நான் வந்து அழைக் கும் வரை இங்கேயே இரு உனக்கு எவ்வித ஆபத்தும் வராது' என்று அவள் உறுதி கூறினாள். "நான் உன்னை உள்ளே விட்டு, வெளியே கதவைப் பூட்டி விடுவேன். ஒரு வேளை காவலர்கள் வந்தாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/20&oldid=906051" இலிருந்து மீள்விக்கப்பட்டது