பக்கம்:விடிவெள்ளி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விடிவெள்ளி நிலையைக் காட்டத் தொடங்கிவிடும். இன்னும் சிறிது நேரத்தில், அம்மனோகரமான இனிய வேளையில், இயற்தை புத்திளமையோடும் புதிய சக்தியோடும் திகழும் குளுமையான நேரத்தில், குளிரையும் பெரிது படுத்த து ஆறு தோக்கி நீராடச் சென்று கொண்டிருந்த கன்னியரின் உள்ளம் குது கலத்தால் நிரம்பி கும்மாளியிட்டது. அவர் கள் பலர் அந்தத் தெம்பும் இயற்கையான குறும்பும் சேர்ந்து அவர்கள் வாய்க்குச் சுதந்திரம் அளித்தன. அவன் ஒருவன். அப்பாவி அப்புறமென்ன! அவர்களிடம் சண்டை விடிக்க முடியுமா? சீறி விழ சைமா? சிரிக்கவாவது செய்யலாமா?. எதைச் செய்தாலும் வினை விஷயும் என்றது இளம்வழுதியின் அறிவு. ஆகவே அவன் கேனாச் செவியனாய் பேசாத வாயாைய் அசையாது நின்றுவிட்டான் ஆனால் அவன் கண்கள் ஒடுங்கி விடவில்லை. ஒவ்வொருத்தியையும் தனித்தனி யாகவும், அம்மங்கையர் குழாத்தை மொத்தமாகவும் ஆராய்ந்தது. - அவன் அருகில் வந்ததும் பெண்கள் நாணியும் கோணியும், ஒயில் நடை பயின் தும் அசையலாயினர். அவனைப் பார்த்ததும் பாராதவர் போல் நடக்க முயன்றனர். பார்ப்பது தெரியாதவாறு பார்க்கமுயன்றன சில விழிகள். அஞ்சனம் தோயந்த அழகு விழிகள் இரண்டு அவன் கண்களைப் பார்வையால் தொட்டதும் ச. க்' கேனத் தணிந்து வீழ்ந்தன. நீருள் பாயும் மீன்கள் போல. *மாவடு வகிர் அன்ன கண்கள் இரண்டு அவனைத் தடவின; பின் இமைத் திரையை இழுத்து மூடிக் கொண்டன. கடலிலும் பெரிய கண்கள் இரண்டு விழிக் கடையில் எவ்வளவு தூரம் ஒதுங்க முடியுமோ அவ்வளவுக்கு ஒதுங்கின. ஒரு கணத்தில் அங்கு எல்வளவோ அற்புதங்கள் நடந்து முடிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/39&oldid=906089" இலிருந்து மீள்விக்கப்பட்டது