பக்கம்:விடிவெள்ளி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண் ணன் C 43 ஒரேயடியாக அவற்றுக்கு அடிமையாகி விடுவது நல்லதல்ல என்ற பதில் அவன் செவிகளுக்குப் பழக்கமான குரலில் ஒலித்தது. அவன் திரும்பிப் பார்த்தான். இனம் துறவியும் மாமூலனாரும் தான் பேசிக்கொண்டு வந்தார்கள் ஆற்றில் நீராடிவிட்டுத் திரும்புகிறார்கள் என்பதை அவர்களுடைய ஈர ஆடைகள் புலப்படுத்தின. "மனதை அடக்க அறியாதவனும், உணர்ச்சிகளை ஒரளவுக்காவது கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளாதவனும் விரும்பத்தகாத விளைவுகளை அனுபவிக்க நேரிடும்..." மாமூலனார் எதற்காக-யாரைக்கருத்தில் கொண்டுஇவ்வாறு பேசுகிறார்? தன்னைக் குத்திக் காட்டத்தானோ இந்த ஐயம் இளம்வழுதியின் உள்ளத்தில் நெளிந்தது, புன்னகையுடன் முகம் அவரையே நோக்கியது. ஆனால் புலவர், அவன் அங்கே நின்றதையே உண ராதவர் போல், துறவியோடு போய்க் கொண்டிருந் தார். - - 5. சுடும் நெருப்பு மீனாட்சி ஆச்சிக்கு எவ்வளவு வயசு ஆகியிருந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவள் பிட்டு வாணிபத் தில் ஈடுபட்டு எவ்வளவு காலம் ஆயிற்று என்பதும் எவ ருக்கும் தெரியாது. ஒரு வீதியின் ஒரத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற மருத மரத்தினடியில் தான் அவள் க.ை இருந்தது. காலையில் ஆச்சி அடுப்புப் பற்றவைக்க வேண்டியது தான் வாடிக்கைக்காரர்களான சிறுமிகளும், பெரிய அம் மான்களும் வந்து குழுமி விடுவார்கள். சுடச்சு. ஆப்ப மும், பிட்டும் செலவாகிக் கொண்டேயிருக்கும். வழிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/44&oldid=906099" இலிருந்து மீள்விக்கப்பட்டது