பக்கம்:விடிவெள்ளி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 51 வரகுணத் தேவரின் திருமகள் திலகவதி அழகியல்ல; தந்தையைப் போல் வஞ்சனையில்லாமல் வளரக்கூடிய உடலியல்பு பெற்றவள்; பருவ மினுமினுப்பு அவள் முகத்துக்கும் மேனிக்கும் ஒரு கவர்ச்சி தந்தது. கறுப்பு நிறம் பெற்றிருந்த அவள் நல்ல கருங்கல் சிலை மாதிரித் தென்பட்டாள். அவளுக்கு இருபது வயசுக்குள்தான் இருக்கும்-இளம் வழுதியின் பார்வை அறிந்துகொண்ட உண்மைகள் இவை. - - அரண்மனையிலிருந்து வண்டி வந்திருக்கிறது. உடனே நீங்கள் வரவேண்டும் என்று ஆளும் இந்திருக் கிறது" என்றாள் அவள். அவளது விழிகள் வழுதியைப் பார்ப்பதில் இன்பம் அடைந்தன. இவர் நம் விருந்தாளி, நான் சென்று திரும்புகிறவரை இவர் இங்கேயே இருக்கட்டும் நன்கு கவனித்துக்கொள், திலகம்' என்று தேவர்சொன்னார். நான் விரைவில் வந்து விடுவேன் வந்ததும் பேசி முடிவு செய்து விடுவோம் என்று இளம்வழுதியிடம் தெரிவித்தார். போனார். வரகுணத் தேவர் சென்ற சிறிது நேரம் கழித்ததும், திலகவதி வந்தாள். இளம்வழுதிக்குப் பழங்களும் பாலும் கொண்டு வந்தாள். இவை எல்லாம் எனக்கு எதற்கு என்று முனகினான் அவன். - - 'உண்டு மகிழ்த்தான். வேறு எதற்காக?' என்று கூறி மென் சிரிப்பு உகுத்தாள் அவள். அவன் உண்பதைக் களிப்புடன் கவனித்தவாறே அவள் பேசினாள் என் தந்தைக்குப் பிடிக்காத விதத்தில் நான் செயல் புரிய வேண்டியிருக்கிறது என்ன செய்வது? அவர் இங்கிருந்து போகும் பொழுது, என்னிடம் உத்திரவிட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/52&oldid=906119" இலிருந்து மீள்விக்கப்பட்டது