பக்கம்:விடிவெள்ளி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக் கண்ணன் 81 அல் அழகிகளில் ஒருத்தியைத் தோட்டு பார்த்தால் என்ன? என் தூண்டுதல் அவர்களுக்கு எதிரே கொண்டு போய் நிறுத்தியது. - இடிரென்று அந்நியன் ஒருவன் தங்கள் முன்னே வந்து நின்று, வெறிப் பார்வை பார்ப்பதைக் கண்ட யுவதிகள் திடுக்கிட்டார்கள் அச்சம் கொண்டார்கள். அலறினார் கள். அழகைக் குலைக்கிறது. இச்செயல் என்று முணு முனுத்தான் அவன். - - 'ஏய், விலகி நில், வழியோடு போகிற பெண்களிடம் வம்பு செய்வதுதான் அழகோ?'- ஆத்திரத்துடன் தெரித்து விழுந்த அதட்டல் மார்பியஸைக் குலுக்கியது. "அழகை வியந்து மகிழ அறியாமல், அழகு பற்றிக் கேள்வி கேட்க வந்த நீ யார்? என்றான் யவனன், அருகே வந்து நின்ற இளம்வழுதியிடம். "நான் யாராகவும் இருக்கிறேன். அதைப் பற்றி உனக்கென்ன? ஒழுங்காக நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போகாமல்.’ . . என் வேலையைத்தான் நான் செய்கிறேன்' என்றான் யவன என். எது உன் வேலை? அழகு எங்கிருந்தாலும், அதைக் கண்டு, உணர்ந்து வியந்து, ரசித்து. - - நிறுத்து! அதற்காக தெருவோடு போகும் பெண் களிடம் தகாத முறையில் நடப்பதா?’ என்றான் இளம் வழுதி, - "நான்எப்படியும் நடப்பேன். என்னை அடக்கி ஒடுக்க நீ யார்?’ என்று கேட்டுவிட்டு அலட்சியமாகச் சிரித்தான். ஞானி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/62&oldid=906142" இலிருந்து மீள்விக்கப்பட்டது