பக்கம்:விடிவெள்ளி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 83 "இங்கேயே நின்றால் உமது ஆயுளும்குறுகியது என்று உணரும் பேறு உமக்குக் கிட்டும். நண்பரே! இப்படி வேகமாக வருக!' என்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுவதுபோல் நடந்தான் சாத்தன். . நீங்கள் அதிகமாகப் பயப்படுகிறீர்களே! என்று வழுதி முனகவும் சாத்தன் சொன்னான்: அஞ்ச வேண்டியதைக் கண்டு அஞ்சுக. அதை எண்ணியும் அஞ்சுக. அதுதான் அறிவுடைமை' - 7. அறிமுகம் உணர்ச்சித் துடிப்போடு யவன ஞானியைத் தாக்கி விட்ட இளம்வழுதியை சாத்தன் கணபதி வேகமாக இழுத்துக்கொண்டு, அருகிலிருந்த சிறுசிறு தெருக்களின் வழியே சென்றது நல்லதாயிற்று. - சூழ்நிலை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்து, களப்பிரன் மார்பியசுடன் வேகமாக நடந்தான். பெரிய வீதியைத் திரும்பி, வேறொரு தெருவில் .செல்லும் போது, சற்றுத் தொலைவில் வீரர்கள் சிலர் நிற்பது அவன் பார்வையில் பட்டது ஞானியும் அவனும் அவ்வீரர்களை நோக்கிச் சென்றனர், இரவு நேரத்தை உல்லாசமாகக் கழிக்கும் எண்னத் தோடு கிளம்பிய களப்பிர வீரர்கள் தான் அவர்கள் என் பதை ஞானியின் நண்பன் புரிந்துகொண்டான். ஆகவே, இருவரும் அவர்களை அணுகி, முரடர்கள் சிலர் கலகம் விளைவிக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனே அவ் வீரர்கள், வேட்டை வெறி பற்றிய நாய்கள் போல் பாய்ந் தார்கள், வழியில்;எதிர்ப்பட்டவர்களை எல்லாம் வம்புக்கு இழுத்தும், உதைத்தும், கூச்சலிட்டும் முன்னேறினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/64&oldid=906146" இலிருந்து மீள்விக்கப்பட்டது