பக்கம்:விடிவெள்ளி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடிவெள்ளி மங்கையர்க்கரசி முறுவல் பூத்தாள். நாங்கள் உன் விடம் கொள்ளும் நம்பிக்கைக்கு ஊறு செய்யாமல், உனது ஆற்றலை நிருபித்துக் காட்டினால் போதும் தமிழுக்கும், பாண்டி நாட்டுக்கும் மறுபடி பும் உயர்நிலை வந்து சேருவதற்கு உரிய முறையில் உனது உழைப்பையும் திறமையையும் ஈடுபடுத்தினால் பே, தும்’ என்றான். புலவரையும், துறவியையும் மற்றுமுள்ள அடி பார்களை பும் நோக்கினாள். - தம் எதுவும் சொல்லாததால் அவளே தொடர்ந்து பசி:ைள். நேற்று சந்தர்ப்பங்கள் சரியாக அமைந் திராத போது நீ உன்னைப் பற்றி விரிவாகப் பேச விரும் பினாய். அதை எல்லாம் நான் வேறொரு சமயத்தில் கேட்டுக்கொள்கிறேன்' என்று சொன்னேன் அல்லவா? இப்பொழுது நல்ல தருணம். தான் மட்டுமல்ல; புலவர் மாமூலனாரும் துறவியாரும் உன்னைப்பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கு உன் வரலாறு துணை புரியும், நீ அதைச் சொல்லலாமே என்றாள். . இளம்வழுதி சொன்னான்: பாண்டியர் நன்னிலை யில் இருந்த காலத்தில் இப்பெரு நிலப்பரப்பு பல வளநாடு கனாகப் பிரிக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும். நாடுகல் என்றும் கூற்றங்கள் என்றும் சிறுசிறு பகுதி களாகப் பிரிக்கப் பெற்று, அவற்றில் பலவற்றைத் தன்ன கத்தே கொண் டு பகுக்கப் பெற்றதே வள நாடு...'

  • அதெல்லசம் எங்களுக்குத் தெரியும். நீர் வளவள’ வென்று பேசாமல் முக்கிய விஷயத்துக்கு வாரும்’ என்று முனங்கினான் நல்லசன். .

இளம்வழுதி கோபம் கொள்ளவில்லை. என்னைப் பற்றிச் சொல்வதற்கு இந்த முன்னுரை தேவை என்று தோன்றியது. அதனாலேயே குறிப்பிட்டேன்...ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/71&oldid=906162" இலிருந்து மீள்விக்கப்பட்டது