பக்கம்:விடிவெள்ளி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 75 படுத்திக் கொண்டு உயர்ந்துவிடத் திட்டமிடுகிற தன்ன லக்காரனாக இருந்தாலும் இருக்கலாம்..." - "உங்களுக்கு ஏன் இந்த ஐயம்? என்று விஷ்ணு சிம்மன் கேட்டான். இன்று ஒருவன் என்னைக் கண்டு பேச வந்தான். அவன் பேச்சிலிருந்து என் சந்தேகம் வளர்ந்தது அதனால் அவனை எனது இல்லத்திலேயே விட்டுவிட்டுப் போதிய கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக் கிறேன். நீங்கள் இரண்டு வீரர்களை அனுப்பினால், அவனை இங்கேயே அழைத்து வந்து விசாரணை நடத்த லாம். நமக்குப் பல செய்திகள் கிடைக்கும்" என்று தேவர் தானாகவே வழிவகுத்துக் காட்டினார். அதற்குமேல் நாம் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்கலாம் என்றார். உடனடியாக நாயனார் அனுப்பி வைத்த ஆட்களுடன் கிளம்பிய தேவர் வழி நெடுகிலும் தனது எதிர் காலத்தில் ஏற்படப் போகித நல் ஒளியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார். இளம்வழுதி தனக்காகக் காத்திருப் பான்’ என்ற நிச்சய நம்பிக்கையோடு வீட்டினுள் பிரவே சித்த தேவருக்குப் பெருத்த ஏமாற்றமே கிட்டியது. 'திலகம், அவன் எங்கே?' என்று அதட்டிக்கேட்டர்ர் அவர். 'எனக்குத் தெரியாது. இங்குதான் இருந்தார். நான் ஏதோ அலுவலாக உள்ளே போயிருந்தேன் சிறிது தேரம் சென்று திரும்பி வந்து பார்த்தால் அவரைக் காணோம்' என்று அமைதியாகப் பதில் சொன்னாள் அவர் அருன்ம மகள், ! தேவரின் கூரிய பார்வை அவள் முகத்தைக் குத்தியது. ஒரு கணம் அங்கு புதிய செய்தி எதையும் உணர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/76&oldid=906172" இலிருந்து மீள்விக்கப்பட்டது