பக்கம்:விடிவெள்ளி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 81 "வண்டியை விரட்டு: என உத்திர விட்டார் வரகு னர். வண்டி நகரத் தொடங்கியது. வேகம் பெற முனைந்தது. திடீரென்று ஒரு பெரும் உலுக்கலுடன் வண்டியோட்டி குதிரைகளைக் கசையினால் சுண்டி னான் அவை முரண்டி முன்னேறப் போராடின. எனி னும் முன்செல்ல முடியாது திணறின. என்ன என்ன விஷயம்?’ என்று பதறினார் தேவர் இளம்வழுதி அட்டகாசமாகச் சிசித்தான். தேவரே! விளையாட்டாக என் பலத்தைச் சோதித் துப் பார்த்தேன், சக்கரத்தைப் பிடித்து இழுத்தேன். வண்டி நின்று விட்டது. என் நண்பன் சாத்தன் இன் னொரு சக்கரத்தில் கைவைத்தான். குதிரைகள் வலு விழந்து திண்டாடுகின்றன" என்று சொன்னான் அன்ை, 'ஏய், இது என்ன விளையாட்டு வண்டியைப் போக விடு' என்றார் தேவர். அவரது உள்ளத்தின் பயம் குர வின் நடுக்கமாக ஒலித்தது. "தாட்டினரைக் காட்டிக் கொடுக்கும் வேலையில் ஈடு ப.ாதீர். உமது தலையில் வினைவாக விடியும் அது. இதை நினைவில் நிறுத்தும்! இதைச் சொல்வதற்காகவே வண் டியை நிறுத்தினோம். இனி நீர் போகலாம் என்து கூறி, பிடியை விட்டுவிட்டா ன் அவன் - வண்டி நகர்ந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று குதிரைகளை வேகமாக விரட் டத் தொடங்கினான் வண்டியோட்டி. தேவரின் இதயம் அதைவிட வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. குதிரைகளின் ஒட்டத்துக் குக் கட்டுப்பாடு விதிக்கும்படி கூறும் எண்ணம் அவருக்கு எழவேயில்லை. வீடு சேர்ந்ததும் தான் வரகுணத் தேவருக்கு துணிச் ச ல் உண்டாயிற்று. ஆயினும் அவர் உள்ளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/82&oldid=906185" இலிருந்து மீள்விக்கப்பட்டது