பக்கம்:விடிவெள்ளி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது விடிவெள்ளி காரணமாகவும் இளம்வழுதியின் உள்ளத்தில் அவள் நிழ லாட மலிருந்தாள். பின்னர் அமைதி ஏற்பட்டதும், கலங்கிக் குழம்பிய நீர்ப்பரப்பில் தெரியாமல் -*. பதுங்கிய சந்திர பிம்பம், குழப்பம் ஒடுங்கியதும் மிகத் ಕ್ಷಿ 6.5 தென்படுவது போலவே, அவளுடைய உருவம ‘Lafé G8ణా ஒளிர்ந்தது குறுகுறுக்கும் கருவிழிகளும், புன்னகை மலரும் செவ்விய உதடுகளும், குமிழ்நாசியும். குழிவுபடி யும் வழுவழுப்பான கன்னங்களும், காவிய ஏடு போன்ற நெற்றியும், மேகக் கற்றைகள் போன்ற கூந்தல் சுருள் களும் எதிர் நின்று வதை செய்வனபோல் அவன் நினை வில் பசுகையாய் எழுத்தன. மாமூலனாரைப் பற்றியும் மங்கையர்க்கரசி பற்றியும், சாத்தன் கணபதி செய்த உதவி பற்றியும் அவன் எவ் வளவோ சிந்திக்க வேண்டியிருந்தது. ஆலோசனைக் கூட் டத்தில் பேசப்பட்ட எண்ணங்களை அவன் தனித்திருந்து அலசி ஆராய வேண்டியிருந்தது அக்கூட்டம் தந்த புத்துணர்வோடு பெரு மிடுக்கோடு வெளியேறிய அவன் பாதையில் வலிய வந்து குறுக்கிட்ட வரகுணத் தேவரைப் பற்றியும், அவருடன் வம்பு செய்ததால் இனிமேல் விளை யக் கூடிய ஆபத்துகள் பற்றியும் அவன் நிதானமாக எண். ணிப் பார்க்கத்தான் வேண்டும். எண்ணிப் பிரித்துத் திட்டமிடுவதற்கா விஷயங்கள் இல்லாமல் போயின இனம் வழுதியின் மனக்குகையிலே? - ஆனால், அவனது அறிவுத் துடிப்புக்குத் திரையிட்டு விட்டது உணர்ச்சிகளில் எல்லாம் மிகுந்த வலிமைபெற்ற உணர்வு இரவும், தனிமையும் அவ் உணர்வுத் தீயைத் துண்டி விட்டன. ஆகவே அவன் எண்ணத்தில் அவளே நின்றான். அவன் கனவில் அவளே சிரித்தாள். அவ னுடைய ஏக்கமேயானாள் அழகி அமுதவல்லி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/85&oldid=906191" இலிருந்து மீள்விக்கப்பட்டது